இந்தியா சென்றபின் ஏழு நாள்கள் இல்லத் தனிமை

நாளை முதல் புதிய நடைமுறை; விமான நிலையத்தில் கட்டாய 'பிசிஆர்' பரிசோதனை

சிங்­கப்­பூர் உட்­பட கொவிட்-19 தொற்று அபா­ய­மிக்க 12 நாடு­களில் இருந்து வரு­ப­வர்­கள் தங்­க­ளது வீட்­டி­லேயே ஏழு நாள்­கள் கட்­டா­ய­மாகத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று இந்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அதி­கம் பர­வக்­கூ­டிய 'ஓமிக்­ரான்' எனும் புதிய உரு­மா­றிய கொரோனா கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து, வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கான புதிய வழி­காட்டி நடை­மு­றை­களை இந்­திய அர­சாங்­கம் வெளி­யிட்­டுள்­ளது. அவை நாளை டிசம்­பர் 1ஆம் தேதி­யில் இருந்து நடை­மு­றைக்கு வர­ இருக்கின்றன.

அதன்­படி, வெளி­நா­டு­களில் இருந்து இந்­தியா செல்­வோர், 'ஏர் சுவிதா' இணை­யப்­பக்­கத்­தில் உள்ள உறு­தி­மொ­ழிப் படி­வத்­தைப் பூர்த்தி செய்ய வேண்­டும்.

கடைசி 14 நாள்­கள் தாங்­கள் எந்­நா­டு­களில் இருந்­தோம் என்ற விவ­ரத்­தை­யும் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யில் 'கொவிட்-19 தொற்று இல்லை' என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தற்­கான சான்­றை­யும் அவர்­கள் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

பய­ணம் செய்­வ­தற்கு 72 மணி நேரத்­திற்­கு­முன் அவர்­கள் கிரு­மிப் பரி­சோ­தனை செய்­து­கொண்­டி­ருக்க வேண்­டும்.

கொரோனா அபா­ய­மிக்­க­தாக இந்­தியா வகைப்­ப­டுத்­தி­யுள்ள 12 நாடு­களில் இருந்து செல்­வோர் கூடு­தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர். சிங்­கப்­பூர், சீனா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்­நா­டு­க­ளி­லி­ருந்து இந்­தியா செல்­வோர் விமான நிலை­யத்­தில் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். முடிவு வரும்­வரை அவர்­கள் விமான நிலை­யத்­தை­விட்டு வெளி­யே­றவோ அல்­லது இணைப்பு விமா­னத்­திற்­குச் செல்­லவோ முடி­யாது.

பரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' என முடிவு வந்­தால் அவர்­கள் வெளி­யேற அனு­ம­திக்­கப்­ப­டு­வர். ஆயி­னும், வீட்­டி­லேயே ஏழு நாள்­கள் அவர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். எட்­டாம் நாளில் மீண்­டும் அவர்­கள் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். அதில் 'தொற்று இல்லை' என முடிவு வந்­தா­லும், அடுத்த ஏழு நாள்­கள் அவர்­கள் தங்­க­ளது உடல் நிலை­யைக் கண்­கா­ணிக்க வேண்­டும்.

விமான நிலை­யத்­தி­லேயே கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­படும் பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, அவர்­களுக்குச் சிகிச்சை வழங்­கப்­படும். அவர்­கள் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது பரி­சோ­த­னை­யில் உறு­தி­யா­னால், அவர்­க­ளி­டம் சேக­ரிக்­கப்­பட்ட மாதிரி மர­ப­ணுச் சோத­னைக்கு அனுப்பி வைக்­கப்­படும்.

பின்­னர் தனி­மைப்­ப­டுத்­தும் இடத்­திற்கு அவர்­கள் அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர் என்­றும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின்­படி அவர்களுக்குச் சிகிச்சை அளிக்­கப்­படும் என்­றும் அமைச்சு கூறி­யுள்­ளது.

தொற்று உறு­தி­யா­னோ­ரின் நெருங்­கிய தொடர்­பு­கள் அர­சாங்­கம் குறிப்­பி­டும் இடத்­தில் அல்­லது வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, கண்­கா­ணிப்­பின்­கீழ் வைக்­கப்­ப­டு­வர்.

கொரோனா அபா­ய­மிக்க நாடு­களின் பட்­டி­ய­லில் இடம்­பெ­றாத மற்ற நாடு­களில் இருந்து செல்­வோர் விமான நிலை­யத்­தை­விட்டு வெளி­யே­ற­லாம். அவர்­கள் அடுத்த 14 நாள்­களுக்­குத் தங்­க­ளது உடல்­நி­லை­யைத் தாங்­க­ளா­கவே கண்­கா­ணித்­துக்­கொள்ள வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!