'சமூகக் கட்டுப்பாடுகளில் இப்போதைக்கு மாற்றமில்லை'

2 mins read

அதி­கம் பர­வக்­கூ­டிய 'ஓமிக்­ரான்' கொரோனா கிருமி கண்­ட­றி­யப்­பட்­ட­தன் எதி­ரொ­லி­யாக சிங்­கப்­பூர் தனது எல்­லைக் கட்­டுப்­பா­டு­களைக் கடு­மை­யாக்­கும்­போ­தும், சமூக அள­வி­லான கட்­டுப்­பா­டு­களில் இப்­போ­தைக்கு எந்த மாற்­ற­மும் இல்லை என்று நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­து உள்­ளார்.

புதிய 'ஓமிக்­ரான்' திரிபு குறித்து போது­மான தக­வல்­கள் தெரி­ய­வ­ராத நிலை­யில், உள்­ளூ­ரில் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்க வேண்­டுமா என்­பதை இப்­போதே கூற இய­லாது என்று திரு வோங் கூறி­னார்.

ஆனா­லும், மாற்­றங்­களுக்கு ஏற்ப விரைந்து தங்­களை மாற்­றிக்­கொள்­ளக்­கூடிய மனப்­போக்கை சிங்­கப்­பூ­ரர்­கள் கொண்­டு இ­ருக்க வேண்­டும் என்று கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான வோங் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

"விரை­வாக மாறி­வ­ரும் சூழ­லில், புதிய தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் நமது நட­வடிக்­கை­க­ளைத் தொடந்து மறு­ஆய்வு செய்­ய­வும் நிலை­மைக்­கேற்ப மாற்­றி­ய­மைக்­க­வும் வேண்­டும்," என்­றார் அமைச்­சர்.

ஓமிக்­ரானே கொரோனா திரி­பு­க­ளின் கடை­சி­யாக இருந்­து­வி­டாது என்ற அவர், "புதிய திரி­பு­கள் தோன்­ற­லாம் என்­ப­தால் அவற்றை எதிர்­கொள்­ள­வும் நாம் தயா­ராக இருக்க வேண்­டும்," என்­றும் சொன்­னார்.

பேரச்­சு­றுத்­த­லாக விளங்­கவல்ல, தற்­போ­தைய தடுப்­பூ­சி­க­ளால் கட்­டுப்­ப­டுத்த இயலாமல் போகக்­கூ­டிய புதிய கொரோனா திரிபு உரு­வெ­டுக்க வாய்ப்­புள்­ளது என்று திரு வோங் கூறி­னார்.

இத்­த­கைய எல்­லாப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் ஒரே தீர்வு இல்லை எனக் குறிப்­பிட்ட அமைச்­சர், கிடைக்­கும் தர­வு­க­ளுக்கு ஏற்ப மாற்­றிக்­கொண்டு, விரைந்து செயல்­பட வேண்­டி­ய­ அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­னார்.

"ஒவ்­வொ­ரு­வ­ரும் சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொண்டு, தங்­க­ளது பங்கை ஆற்ற வேண்­டும். அர­சாங்­கத்­தின் நட­வ­டிக்­கை­களுக்கு ஒத்­து­ழைப்பு அளித்து, இந்­தப் பெருந்­தொற்­றுக்கு எதி­ரான போரை இணைந்து எதிர்­கொள்ள வேண்­டும்," என்று திரு வோங் கேட்­டுக்­கொண்­டார்.