ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பத்துப் பேரைத் தேடும் இந்தியா

ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பத்துப் பேரைத் தேடும் இந்தியா

1 mins read

இந்­தி­யா­வில் முதன்­மு­த­லாக கர்­நாடக மாநி­லத்­தில் இரு­வ­ருக்கு 'ஓமிக்­ரான்' கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து பெங்­க­ளூரு விமான நிலை­யத்தை வந்­த­டைந்த 57 பேரில் 10 பேரைத் தேடி வரு­வ­தாக கர்­நா­டக சுகா­தார அமைச்­சர் டாக்­டர் சுதா­கர் தெரி­வித்­துள்­ளார்.

"அவர்­க­ளின் கைபே­சி­கள் அணைத்து வைக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­கள் குறிப்­பிட்ட முக­வ­ரி­யி­லும் ஆள் இல்லை," என்­றார் அவர்.

'ஓமிக்­ரான்' தொற்­றிய இரு­வரின் முதல்­நிலை, இரண்­டாம்நிலைத் தொடர்­பு­கள் என கிட்­டத்­தட்ட 500 பேரைக் கண்­ட­றிந்து, அவர்­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக 'தி இந்து' செய்தி கூறுகிறது.

இத­னி­டையே, தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து ஜெய்ப்­பூர் திரும்­பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் 28 பேரை 'ஓமிக்ரான்' தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.