வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் விடுதிவாசிகள் ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வர முடியாது

கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறை துறைகளில் பணியாற்றும் எஸ்.பாஸ் மற்றும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களின் முதலாளிகள், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைக்க இன்று சனிக்கிழமை (டிசம்பர் 4) இரவு 11.59 மணியிலிருந்து, புதிய விண்ணப்பங்களைச் செய்ய அனுமதிக்கப்பட மாட்டர்.

தங்குவிடுதிகளில் வசிக்கவிருக்கும் வேலை அனுமதி வைத்திருப்போரின் முதலாளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று மனிதவள அமைச்சு இன்று தெரிவித்தது.

மாறாக, இத்தகைய ஊழியர்கள் ஏற்கெனவே நடப்பில் உள்ள தொழில்துறைத் திட்டங்கள் மூலம் சிங்கப்பூருக்கு வரலாம். வேலை அனுமதி வைத்திருப்போருக்கான பொது பயணத்தடத் திட்டம் அவற்றில் ஒன்று.

எடுத்துக்காட்டாக, ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரத்தைக் காட்டுவதுடன், மருத்துவப் பரிசோதனைக்கும் செல்ல வேண்டும்.

‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர ஏற்கெனவே அனுமதி பெற்றுவிட்ட ஊழியர்கள், அத்திட்டத்தின் வழியாக இங்கு வரலாம். எனினும், சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அவர்கள் கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொண்டு, முடிவு வெளிவரும்வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனத் தெரியவந்த பிறகு, ‘ஆன்போர்டிங்’ எனப்படும் ஐந்து நாள் திட்டத்தில் ஊழியர்கள் ஈடுபடலாம்.

இதன் தொடர்பில் கூடுதல் விவரங்கள் முதலாளிகளிடம் தெரியப்படுத்தப்படும்.

இந்நிலையில், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மலேசியர்களும் பெண்களும் ‘விடிஎல்’ வழியாக சிங்கப்பூருக்கு வர தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

“இத்தகையோர் பொதுவாக தங்குவிடுதிகளில் வசிக்காததே அதற்குக் காரணம்,” என்று அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!