ஐந்து நாளில் 7,800 பேர் பயணம்

2 mins read
d70d2648-b8fc-4752-a619-7a46a8c946ea
முதல் ஐந்து நாள்­களில் இரு நாடு­களில் இருந்­தும் 5,033 பேர் பிரத்­தி­யேக பேருந்­துச் சேவை­கள் மூல­மாக கடற்­பாலத்­தைக் கடந்­த­னர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர்-மலேசியா இடையிலான 'விடிஎல்' பயண ஏற்பாடு

சிங்­கப்­பூர்- மலேசியா எல்­லைகள் மீண்டும் திறக்கப்­பட்டு, முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே தரை­வ­ழி­யாக பய­ணம் செய்ய அனு­ம­திக்­கும் 'விடி­எல்' திட்­டம் தொடங்­கப்­பட்டு முதல் ஐந்து நாள்­களில் 5,000க்கும் மேற்­பட்­டோர் பய­ணம் செய்­துள்­ளனர்.

அதே கால­கட்­டத்­தில், வான்­வழி 'விடி­எல்' திட்­டத்­தைப் பயன்­படுத்தி மலே­சி­யா­வில் இருந்து 2,771 பேர் சிங்­கப்­பூர் வந்­த­னர்.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்­கப்­பூர்-மலே­சியா எல்­லை­கள் மூடப்­பட்­டன. இத­னால் வெகு­கா­ல­மா­கக் குடும்­பங்­க­ளைப் பிரிந்து இருப்­ப­வர்­கள் மீண்­டும் ஒன்­றி­ணைய ஏது­வாக சென்ற மாதம் 29ஆம் தேதி இரு நாடு­க­ளுக்­கும் இடையே வான்­வழி, தரை­வழி 'விடி­எல்' பயண ஏற்பாடுகள் தொடங்­கப்­பட்டன.

இத­னை­ய­டுத்து, முதல் ஐந்து நாள்­களில் இரு நாடு­களில் இருந்­தும் 5,033 பேர் பிரத்­தி­யேக பேருந்­துச் சேவை­கள் மூல­மாக கடற்­பாலத்­தைக் கடந்­த­னர் என்று குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

இப்­போ­தைக்கு, குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்டை உடை­யோர் மட்­டுமே தரை­வழி 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அன்­றா­டம் அனு­ம­திக்­கப்­படும் அதி­க­பட்ச எண்­ணிக்­கை­யை­வி­டக் குறை­வா­ன­வர்­களே பிரத்­தி­யே­கப் பேருந்­து­களில் பய­ணம் செய்­துள்­ள­னர். ஒரு நாளைக்கு இரு திசை­களி­லும் தலா 1,440 பேர் பய­ணம் செய்­ய­லாம்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் 3 மணி­வரை, தரை­வழி 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் 4,343 பேர் சிங்­கப்­பூ­ரில் இருந்து மலே­சியா சென்­ற­னர்.

மாறாக, அதே கால­கட்­டத்­தில் 690 பேர் மட்­டுமே பேருந்து மூல­மாக சிங்­கப்­பூர் வந்­த­னர்.

இதற்­கி­டையே, இம்­மா­தத்­தில் சிங்­கப்­பூ­ரில் இருந்து மலே­சியா செல்­வ­தற்­கான பேருந்­துப் பய­ணச்­சீட்­டு­கள் பெரும்­பா­லும் விற்­றுத் தீர்ந்­து­விட்­டன.

கடந்த 2ஆம் தேதி நில­வ­ரப்­படி, இம்­மா­தத்­தின் கடைசி நான்கு நாள்­க­ளைத் தவிர்த்து மற்ற எல்லா நாள்­க­ளுக்­கும் ஜோகூர் பாரு­விற்­குச் செல்­வ­தற்­கான பய­ணச்­சீட்டு­களை விற்­று­விட்­ட­தாக பிரத்­தி­யேக இரு பேருந்­துச் சேவை­களில் ஒன்றை இயக்­கும் 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அதேபோல, சிங்­கப்­பூ­ரில் இருந்து ஜோகூர் பாரு செல்ல கிட்­டத்­தட்ட 24,000 பய­ணச்­சீட்­டு­களும் அங்­கி­ருந்து சிங்­கப்­பூர் வர ஏறக்­குறைய 14,500 பய­ணச்­சீட்­டு­களும் விற்­கப்­பட்­டு­விட்டன என்று 'விடி­எல்' பேருந்­துச் சேவையை வழங்­கும் இன்­னொரு நிறு­வ­ன­மான 'ஹண்­டால் இண்டா'வின் (காஸ்வே லிங்க்) பேச்­சா­ளர் கூறி­னார்.

மலே­சியா செல்­வ­தற்­கான 'ஹண்­டால் இண்டா' பய­ணச்­சீட்டு­களில் கிட்­டத்­தட்ட 90% விற்­கப்­பட்­டு­விட்­ட­தாக அவர் சொன்­னார்.

இருப்­பி­னும், ஆவ­ணப் பிரச்­சினை­க­ளால் பய­ணச்­சீட்டு வைத்­தி­ருந்­தும் பய­ணி­கள் பலர் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டா­மல் திருப்பி­ய­னுப்­பப்­பட்­ட­தாக இரு நிறு­வ­னங்­களும் குறிப்­பிட்­டன.

விமா­னம் வழி­யா­கப் பய­ணம் செய்த 2,771 பேரில் 1,773 பேர், பயண அனு­மதி பெற்ற நீண்­ட­கால மற்­றும் குறு­கி­ய­கால அனு­மதி அட்­டை­தா­ரர்­கள், 871 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள், 127 பேர் 12 வய­திற்­குட்­பட்ட குழந்­தை­கள் என்று சிங்­கப்­பூர் சிவில் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.