2034 உலகக் கிண்ணம்: ஆசியான் முடிவிற்கு வரவேற்பு

1 mins read
44f0ff14-6386-4fee-ab91-a44dde9757cc
ஜாலான் புசார் விளையாட்டரங்கில் காற்பந்து விளையாடி மகிழ்ந்த ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் 2034ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­களை ஏற்று நடத்த ஆசி­யான் நாடு­கள் இலக்கு கொண்­டுள்­ளதை உல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்­பின் (ஃபிஃபா) தலை­வர் ஜியானி இன்­ஃபேன்­டினோ வர­வேற்­றுள்­ளார்.

சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கத்­தின் புதுப்­பிக்­கப்­பட்ட தலை­மை­ய­கத்­தைத் திறந்­து­வைக்­க­வும் திட­லில் புதி­தாக அமைக்­கப்­பட்ட புல்­தரையை அறி­மு­கப்­ப­டுத்­த­வும் ஜாலான் புசார் விளை­யாட்­ட­ரங்­கிற்கு நேற்று வருகை புரிந்­த­போது திரு இன்­ஃபேன்­டினோ இவ்­வாறு சொன்­னார்.

"உல­கக் கிண்­ணப் போட்டிகளை ஏற்று நடத்­து­வது என்­பது மிகப் பெரிய லட்­சி­யம். அதற்­குப் பொரு­ளி­யல், காற்­பந்து ரீதி­யாக ஆசி­யா­னுக்கு நிச்­ச­ய­மா­கத் தகுதி­ இருக்கிறது," என்­றார் இவர்.

மொத்­தம் 650 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்­டுள்ள ஆசி­யானில் காற்­பந்து விளையாட்டு மிகப் பிர­ப­ல­மாக இருப்­ப­தை­யும் இவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

2034 உல­கக் கிண்ண இறு­திப் போட்­டி­க­ளுக்­குத் தகு­தி­பெறுவது எனும் சிங்­கப்­பூ­ரின் குறிக்­கோளை 'முன்­னோக்­கிய நட­வடிக்கை' என்று பாராட்­டிய திரு இன்­ஃபேன்­டினோ, அதற்கு சிங்­கப்­பூ­ரில் உள்ளதுபோல்­இலக்­கு­டன் கூடிய காற்­பந்­துச் சங்­க­மும் அத்­திட்­டத்­திற்கு அர­சாங்­கத்­தின் ஆத­ர­வும் இருக்க வேண்­டும் என்று பாராட்­டிப் பேசி­னார்.