பயணத்திற்குமுன் உமிழ்நீர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள அனுமதி

பயணத்திற்குமுன் உமிழ்நீர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள அனுமதி

2 mins read

பய­ணத்­திற்கு முந்­திய கொவிட்-19 பரி­சோ­த­னைக்­காக, பய­ணி­க­ளின் உமிழ்­நீ­ரைப் பரி­சோ­திக்­கும் முறைக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு இருக்­கிறது.

வெளி­நாடு செல்வோருக்கு உமிழ்­நீர்ப் பரி­சோ­த­னைத் தெரிவை வழங்­கும் நோக்­கில், உள்­ளூர் உயிர்­ம­ருத்­துவ நிறு­வ­ன­மான லூசன்ஸ், மருந்­த­கங்­க­ளு­ட­னும் தொலை­ம­ருத்­து­வச் சேவை வழங்கு­நர்­க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்­றத் தொடங்­கி­யுள்­ளது.

தாங்­கள் கொவிட்-19 உமிழ்­நீர்ப் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தகு­தி­யா­ன­வர்­களா என்­பதை முடிவு­செய்ய, பய­ணி­கள் தாங்­கள் செல்­லும் நாடு­க­ளின் பயண ஆலோ­சனைக் குறிப்­பு­க­ளைப் பார்க்­கும்­படி லூசன்ஸ் நிறு­வ­னம் தனது இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, இப்­போ­தைக்கு அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, கனடா, ஜப்­பான் உள்­ளிட்ட நாடு­கள் உமிழ்­நீ­ரைக் கொண்டு மேற்­கொள்­ளப்­படும் பய­ணத்­திற்கு முந்­திய கொவிட்-19 பரி­சோ­த­னை­களை ஏற்­றுக்­கொள்­கின்­றன.

இம்­மா­தம் 2ஆம் தேதி உமிழ்­நீர்ப் பரி­சோ­த­னைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­தாக லூசன்ஸ் தலைமை நிர்­வாகி டான் மின் ஹான் குறிப்­பிட்­டார்.

'சேஃபர் சாம்­பிள்' எனப்­படும் உமிழ்­நீர்ப் பரி­சோ­த­னைத் தொகுப்பு, தொடக்­கத்­தில் 'ஏ ஸ்டார்' அமைப்­பு­டன் இணைந்து உரு­வாக்­கப்­பட்­டது. பின்­னர் 2020 ஜூனில் அது ஒரு மருத்­து­வக் கரு­வி­யாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்தில் பதி­வு­செய்­யப்­பட்­டது.

சேக­ரிப்­புக் குழா­யு­டன் இணைக்­கப்­பட்­டிருக்கும் ஊற்­றுக்­கு­ழல்வழி­ 2 மி.லி. உமிழ்­நீர் சேக­ரிக்­கப்­படும்.

பின்­னர் வேதிப்­பொ­ருள் கலந்­துள்ள நிலைப்­ப­டுத்­தும் திர­வம் அடங்­கிய போத்­த­லி­னுள் அது கலக்­கப்­பட்டு, பகுப்பாய்விற்கு உட்­படுத்­தப்­படும்.

இப்­போ­தைக்கு அங் மோ கியோ­வில் கெய்ன்­ஹெல்த் மருந்­த­க­மும் 'மைடாக்' எனும் தொலை­ம­ருத்­துவ நிறு­வ­ன­மும் உமிழ்­நீர்ப் பரி­சோதனை சேவையை வழங்கி வரு­கின்­றன. மேலும் பல மருந்­த­கங்­களும் தொலை­ம­ருத்­துவ நிறு­வனங்­களும் உமிழ்­நீர்ப் பரி­சோ­த­னைச் சேவையை வழங்­கு­வ­தற்­கான திட்­டங்­கள் இடம்­பெற்று வரு­வ­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

உமிழ்­நீர்ப் பரி­சோ­தனை முடிவு 24 மணி நேரத்­திற்­குள் கிடைத்­து­வி­டும். கட்­ட­ண­மும் பய­ணத்­திற்கு முந்­திய 'பிசி­ஆர்' பரி­சோ­த­னையை ஒத்த அளவிலேயே இருக்கும்.