‘விடிஎல்’ மூலம் மலேசியா போகும் பயணிக்கு ஆறு நாள் கொவிட்-19 பரிசோதனை

மலே­சியா தன் நாட்­டுக்கு வரும் அனைத்­து­லகப் பய­ணி­க­ளுக்­கும் உள்­ளூர் பய­ணி­க­ளுக்­கும் கொவிட்-19 நிபந்­த­னை­களை மூன்று பய­ணத் திட்­டங்­க­ளின்­கீழ் திருத்தி அமைத்து இருக்­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான விமான, தரை­வ­ழிப் பயணத் திட்­டம் (விடிஎல்), லங்காவி அனைத்து­லக பய­ணத் திட்­டம், குறு­கிய வர்த்­தகப் பய­ணி­க­ளுக்­கான ஓரி­டச் சேவை நிலை­யம் ஆகிய பய­ணத் திட்­டங்­க­ளின் கீழ் மலே­சியா வரு­வோர், ஆறு நாட்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் இருந்து செல்­லும் பய­ணி­க­ளுக்­கும் இந்த நிபந்­தனை பொருந்­தும்.

இந்த நிபந்­த­னை­கள் டிசம்­பர் 9ஆம் தேதி (இன்று) முதல் நடப்புக்கு வரும் என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தின் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் தரை­யி­றங்­கி­ய­தற்கு பிறகு இரண்­டா­வது, நான்­கா­வது, ஆறா­வது நாளில் ஆர்­டிகே-ஏஜி (சுய­ப­ரி­சோ­தனை) அவர்கள் உட்­பட வேண்­டும்.

மூன்­றா­வது மற்­றும் ஐந்­தா­வது நாளில் நிபு­ணத்­துவ ஆர்­டிகே-ஏஜி பரி­சோ­த­னையை அவர்­கள் செய்து­கொள்ள வேண்­டும்.

லங்­காவி பய­ணத் திட்­டத்­தின்­கீழ் வரு­வோர் அந்­தத் தீவை விட்டு புறப்­ப­டு­வ­தற்கு குறைந்­த­பட்­சம் 48 மணி நேரம் முன்­ன­தாக பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்டும். பரி­சோ­தனை முடி­வு­கள் அனைத்­தும் MySejahtera செயலி வழி­யாக தெரி­விக்­கப்­பட வேண்டும்.

பய­ணி­கள் அனை­வ­ரும் முற்றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­க­வேண்­டும். பய­ணத் தேதிக்கு குறைந்­த­பட்­சம் 48 மணி நேரம் முன்­ன­தாக அவர்­கள் பிசிஆர் பரி­சோ­த­னை­யைச் செய்து­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் கூறி­ய­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்தது.

பிரிட்­டன், அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், நார்வே ஆகிய ஐந்து நாடு­களில் இருந்து வரும் பய­ணி­கள் மலே­சி­யா­வுக்கு புறப்­ப­டு­வ­தற்கு 48 மணி நேரம் முன்­ன­தாக பிசி­ஆர் பரிசோத னைக்கு உட்­பட்டு இருக்­க­ வேண்டும் என்­றும் அமைச்­சர் கைரி தெரி­வித்­தார். அவர்­கள் கட்­டாய தனிமைப்படுத்தல் காலத்­தின்­போது எப்­போ­துமே மின்­னி­லக்கத் தட­ம­றி­யும் சாத­னத்­தைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

தற்­கா­லிக பய­ணத் தடை விதிக்­கப்­பட்டு இருக்­கும் எட்டு நாடு­களில் இருந்து வரும் மலே­சியக் குடி­மக்­கள், நீண்­ட­கால அனு­ம­தி­தா­ரர்­கள் உள்­ளிட்ட சுற்­றுப்­ப­ய­ணி­கள் அனை­வ­ரும் குறிப்­பிட்ட இடங்­களில் 14 நாட்­கள் கட்­டா­ய­மாக தனி­மை­யில் தங்கி இருக்­கும்­போது மின்­னி­லக்க தட­ம­றி­யும் சாத­னத்தைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!