தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமைத் தளபதி உட்பட 13 பேர் பலி

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமைத் தளபதி உட்பட 13 பேர் பலி

2 mins read
75ea790c-3c1d-4b5b-880b-640839d52810
குன்னூர் காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்தபோது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ் ஹெலி காப்டரில் பயணித்தமுப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத். -
multi-img1 of 2

இந்­திய முப்­படைத் தலை­மைத் தளபதியை ஏற்றிச் சென்ற ஹெலி­காப்­டர் தமிழ்­நாட்­டில் நேற்று கீழே விழுந்து தீப்­பி­டித்து எரிந்­த­தில் அதி­லி­ருந்த 13 பேர் கொல்­லப்­பட்­ட­தாக விமா­னப் படை தெரி­வித்­தது. மாண்­ட­வர்­களில் முப்­படை தலைமைத் தள­பதி பிபின் ராவத்­தும், 63, அவ­ரின் மனைவி மது­லிகா ராவத்­தும் அடங்­கு­வர்.

நீல­கிரி மாவட்­டம் குன்­னூர் வெலிங்­ட­னில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்­லூ­ரி­யில் நடக்­க­விருந்த கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக முப்­படைத் தலை­மைத் தள­பதி அவரின் மனைவி, ராணுவ உய­ர­தி­கா­ரி­கள் உட்­பட மொத்­தம் 14 பேர் ஹெலிகாப்­ட­ரில் சென்றனர். 13 பேர் இறந்து விட்டனர், ஒருவர் குறித்த விவரம் தெரியவில்லை.

கோவை மாவட்­டம், சூலூரி­லுள்ள ராணுவ விமா­னப்­ப­டைத் தளத்­தி­லி­ருந்து, 11.30 மணி­ய­ள­வில் ஹெலி­காப்­ட­ர் வெலிங்­டன் நோக்கிக் கிளம்­பி­யது. குன்­னூர் மலைப் பகுதி­யில் உள்ள காட்­டேரி பள்­ளத்­தாக்குக்கு மேலே அந்த எம்ஐ-17 ரக ஹெலி­காப்­டர் பறந்­த­போது மேக­மூட்­டம் கார­ண­மாக அது கட்டுப்­பாட்டை இழந்து மரத்­தில் மோதி கீழே விழுந்து தீப்­பி­டித்­த­தாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தை அடுத்து உயர் ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் அங்கு செல்லவிருந்ததாகவும் நேற்றுத் தகவல்கள் தெரிவித்தன.

விபத்து பற்றி உயர்மட்ட விசார ணைக்கு விமானப் படை உத்தர விட்டது. புதுடெல்லியில் பிரதமர் மோடி, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசரக் கூட்டம் நடத்தினர்.

விபத்து குறித்து ராணு­வத் தலை­வர் மூலம் பிரதமர் மோடிக்குத் தற்காப்பு அமைச்சர் விளக்கினார்.

புது­டெல்­லி­யிலுள்ள ஜென­ரல் ராவத் வீட்­டிற்­கு நேற்று சென்ற அமைச்­சர் இன்று நாடாளுமன்றத்தில் விபத்து பற்றி விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் கூறின.