நோய்த்தொற்றை அழிக்கும் அணுக்களைக் (ஆன்டிபாடி) கொண்டு கொவிட்-19 தொற்றுக்கு சிகிக்சை அளிக்கும் ஆஸ்ட்ராஸெனிகாவின் மருந்தைப் பெற அந் நிறுவனத்துடன் சிங்கப்பூர் புதிய கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
'எவுஷெல்ட்' (Evusheld) எனப்படும் இந்த மருந்து ஆண்டிறுதிக்குள் சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருந்தில் நீண்டகாலத்துக்கு செயல்படக்கூடிய இரண்டு வகை 'ஆன்டிபாடி'கள் உள்ளன. 'மோனோக்ளோனல்' (Monoclonal) எனப்படும் 'ஆன்டிபாடி', கிருமிக்கு எதிராகப் போராடக்கூடிய நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்க உதவும்.
இவை உடலில் ஏற்படும் கொவிட்-19 தொற்றை அடை
யாளம் கண்டு செயலிழக்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும். உடலுக்குள் வளர்ந்து மாற்றமடைந்து செயல்படத் தொடங்குவதற்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளும்.
குணமடைந்து வரும் கொவிட்-19 ய நோயாளிகளிடமிருந்து பெறப்படும் பி-செல் எனப்படும் உயிரணு ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும். அதிலிருந்து இருவகை 'ஆன்டிபாடி'யை இந்த மருந்து பெறும்.
மேலும், 'எவுஷெல்ட்' மருந்து எடுத்துக்கொண்டோரின் உடலில் ஓராண்டுவரை செயல்படக்கூடியது.
மிதமான நோய் அறிகுறிகள் ஏற்பட்ட ஒருவர் மூன்று நாள்களுக்குள் 'எவுஷெல்ட்' மருந்தை எடுத்துக்கொண்டால், கடும் நோய் அல்லது மரணம் ஏற்படும் அபாயத்தை அது 88% வரை குறைக்கும்.
மூன்று தடவை நடத்தப்பட்ட மருத்துப் பரிசோதனைகளுக்குப் பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்ட்ராஸெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகைக் கிருமி உள்ளிட்ட பலவகையான தொற்றுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலையும் இது கொண்டிருப்பதாக சோதனைக் கூடங்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த மருந்து தொடர்பாக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் கேட்டது.
அனுமதியைப் பெறும் நோக்கில் 'எவுஷெல்ட்' தொடர்பான ஒழுங்குமுறை விதிகளைக் சமர்ப்பிப்பதன் தொடர்பில் ஆஸ்ட்ராஸெனிகாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக ஆணையம் கூறியது. இது தொடர்பாக எந்தவொரு விண்ணப்பமும் பதிவு செய்யப்படவில்லை.
'எவுஷெல்ட்' மருந்தை அவசர நிலைக்குப் பயன்படுத்துவதற் கான அனுமதியை இந்த வாரம் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்திடம் (எஃப்டிஏ) இருந்து ஆஸ்ட்ராஸெனிகா பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இதர நாடு
களின் அனுமதியை அது நாடி வருகிறது.
கொவிட்-19க்கு சிகிச்சையளிக்க புதிய ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் கையெழுத்து

