பிரிட்டனை வதைக்கும் ஓமிக்ரான்: வேகமாகப் பரவும் அபாயம்

பிரிட்டனை வதைக்கும் ஓமிக்ரான்: வேகமாகப் பரவும் அபாயம்

2 mins read

புதிய வகை ஓமிக்­ரான் தொற்­றுக்கு எதி­ராக பிரிட்­டன் தனது போராட்­டத்­தைத் தொடங்கி உள்­ளது.

அங்கு ஓமிக்­ரான் தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை ஒவ்­வொரு மூன்று நாளி­லும் இரட்­டிப்­பாகி வரு­வ­தாக 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை வரை பிரிட்­ட­னில் 817 பேரி­டம் ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்டுள்­ளது. இருப்­பி­னும் உண்­மை­யான எண்­ணிக்கை இதை­விட அதி­க­மாக இருக்­க­லாம் என அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அன்­றா­டம் புதி­தாக உறுதி செய்­யப்­படும் கொரோனா தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் சரா­சரி எண்­ணிக்­கை­யான 48,000ஐ காட்­டி­லும் இது சிறி­து­தான் என்று அதி­

கா­ரி­கள் கூறி­னர்.

"இதே நிலை நீடித்­தால் அடுத்த இரண்டு முதல் நான்கு வார காலத்­தில் ஓமிக்­ரான் தொற்று கொரோனா தொற்று எண்­ணிக்­கை­யில் கிட்­டத்­தப்­பட்ட பாதி அளவு என்ற நிலையை எட்டி வி­டும் என எதிர்பார்க்கிறோம்," என பிரிட்டன் அர­சாங்­கத்­தின் சுகா­தா­ரப் பாது­காப்பு முகவை எச்­ச­ரித்து உள்­ளது.

'இேலசான பாதிப்­பையே

ஓமிக்­ரான் ஏற்­ப­டுத்­தும்'

இதற்­கி­டையே, ஓமிக்­ரான இலே­சான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைச் சேர்ந்த மருந்து கண்­கா­ணிப்பு நிறு­வ­னம் ஒன்று கூறியுள்­ளது.

டெல்டா வகை­யைக் காட்­டி­லும் குறைந்த பாதிப்­பையே ஏற்

­ப­டுத்­தும் என்று இவ்­வாறு உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­த­தைத் தொடர்ந்து ஐரோப்­பிய மருந்து முகவை (இஎம்ஏ) இவ்­வாறு குறிப்­பிட்டுள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் கருத்­து­களை இது­வும் பிர­தி­ப­லித்­தா­லும் இது தொடர்­பாக மேலும் பல விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­யது.

"இது­வரை ஓமிக்­ரான் தொற்­றிய சம்­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இது இலே­சான பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்.

"இருப்­பி­னும் இதர வகைக் கிரு­மி­க­ளைக் காட்­டி­லும் ஓமிக்­ரான் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­ப­தற்­குப் போது­மான ஆத­ரங்­களை நாங்­கள் திரட்ட வேண்டி உள்­ளது," என்று இஎம்­ஏ­வின் உயிர் மருத்­துவ சுகா­தார அச்­சு­றுத்­தல் மட்­டும் தடுப்­பூசி உத்­தி பிரி­வின் தலை­வர் மார்கோ கேவல்ரி தெரி­வித்­துள்­ளார்.