அரசு ஊழியர் முன்னெழுத்தையும் கையெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உடனடி உத்தரவு

அரசு ஊழியர் முன்னெழுத்தையும் கையெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உடனடி உத்தரவு

2 mins read

முத­ல­மைச்­சர் தொடங்கி கடை­நிலை அர­சாங்க ஊழி­யர்வரை அனை­வ­ரும் முன்­னெ­ழுத்­தை­யும் (இனி­ஷி­யல்) கையெ­ழுத்­தை­யும் தமி­ழி­லேயே போட­வேண்­டும் என தமி­ழக அரசு உத்­த­ரவு பிறப்­பித்து உள்­ளது.

1956ஆம் ஆண்டு நடை­மு­றைப்

­ப­டுத்­தப்­பட்ட தமிழ் ஆட்­சி­மொழிச் சட்­டத்­தின் முதன்­மைப் பணி­யாக அரசு அலு­வ­லர்­கள், பணி­யா­ளர்­கள் அனை­வ­ரும் தமி­ழி­லேயே கையெ­ழுத்­திட வேண்­டும் என 1978 ஜூன் மாதம் அர­சாணை வெளி­யி­டப்­பட்­டது. பின்­னர் சுமார் இரு­பது ஆண்­டு­கள் கழித்து 1998 செப்­டம்­ப­ரில் தந்தை, தாய் மற்­றும் ஊர் பெயர்­களை முன்­னெ­ழுத்­தாக எழுது ­வோர் அத­னைத் தமி­ழி­லேயே எழுத வேண்­டும் என்று அப்­போது ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த அரசு உத்­த­ர­விட்­டது.

ஆனால், முன்­னெ­ழுத்து, கையெ­ழுத்து ஆகி­ய­வற்­றைத் தமி­ழில் எழுத வேண்­டும் என்று பிறப்­பிக்கப் பட்ட இந்த இரு உத்­த­ர­வு­களும் சரி­வ­ரப் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

"எனவே முன்பு பிறப்­பிக்­கப்­பட்ட அர­சா­ணை­க­ளின்­ப­டி­யும் தற்­போது வெளி­யி­டப்­பட்ட அறி­விப்­பின் அடிப்­ப­டை­யி­லும் முதல்­வர், அமைச்­சர்­கள், எம்­பிக்­கள், எம்­எல்­ஏக்­கள், ஐஏ­எஸ், ஐபி­எஸ் அதி­கா­ரி­கள் முதல் கடை­நிலை ஊழி­யர்­கள்வரை அனைத்து அரசு ஊழி­யர்­களும் அனைத்து இனங்­க­ளி­லும் தங்­க­ளின் பெயரை எழு­தும்­போ­தும் கையொப்­ப­மி­டும்போதும் முன்­னெ­ழுத்­தை­யும் தமி­ழி­லேயே எழுத வேண்­டும் என்று வலி­யு­றுத்தி மீண்­டும் ஆணை பிறப்­பிக்­க­லாம்," என தமிழ் வளர்ச்­சித்­துறை இயக்­கு­நர் தெரி­வித்­தி­ருந்­தார்.

பள்ளி, கல்­லூரி மாணவ, மாண­வி­கள் இடையே, தமி­ழில் பெயர் எழு­தும்­போது அதன் முன்­னெ­ழுத்­தை­யும் தமி­ழி­லேயே எழு­தும் நடை­மு­றையை கொண்டு வர­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

இவ­ரது கருத்தை ஏற்­றுக்­கொண்ட தமி­ழக அரசு, அதற்­கான ஆணையை வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்­டுள்­ள­து­டன் இந்த உத்­த­ரவு உட­ன­டி­யாக நடப்­புக்கு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

"தமி­ழின் பெருமை, முன்­னெ­ழுத்­தை­யும் கையொப்­பத்­தை­யும் தமி­ழில் இடு­வ­தில் உள்ள பெரு­

மி­தம் ஆகி­ய­வற்றை சுவ­ரொட்­டி­கள் அமைத்து தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்" என அர­சா­ணை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.