அடுத்த இரு மாதங்களில் 2 மி. தடுப்பூசிகள்

அடுத்த இரு மாதங்களில் 2 மி. தடுப்பூசிகள்

3 mins read

சிங்­கப்­பூ­ரில் அடுத்த இரண்டு மாதங்­களில் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் போடப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உல­க­ள­வில் ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை வேக­மா­கப் பரவி வரு­வ­தால், சிங்­கப்­பூ­ரில் அதி­க­ள­வில் பாதிப்பு ஏற்­ப­டா­மல் இருக்­க­வும் தயார்­நி­லை­யில் இருக்­க­வும் இந்­தத் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை மிக­வும் முக்­கி­யம் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

ஐந்து வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ரும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்­தின இரவு அறி­வித்­தது.

அத்துடன், 18 வய­துக்­கும் 29 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­களும் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவ்­வாறு தடுப்பூசி போட்­டுக்­கொள்­ப­வர்­கள் குறைந்­தது ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டு­க்

கொண்­டி­ருக்க வேண்­டும்.

"டெல்டா கிரு­மி­வ­கை­யை­விட ஓமிக்­ரான் மிக எளி­தாக, வேக­மா­கப்

பர­வக்­கூ­டி­யது என்று ஆரம்­ப­க்கட்ட ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. எனவே, கண் மூடி திறப்­ப­தற்­குள் அந்த வகை கிருமி உல­க­மெங்­கும் பர­வி­வி­டும். டெல்டா கிரு­மி­வ­கை­யை­விட அது

பல­ருக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்

சாத்­தியம் உள்­ளது.

"எனினும் டெல்­டா­வை­விட ஓமிக்­ரான் இலே­சான பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று முதல்­கட்ட ஆய்வு தெரி­வித்­துள்­ளது. இருப்­பி­னும், வேக­மா­கப்

பர­வும் தன்­மையை ஓமிக்­ரான் கொண்­டி­ருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரில் சில­ருக்­குக் கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டா­லும் அது நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு மிகக் கடு­மை­­யான அழுத்­தத்தை ஏற்

­ப­டுத்­தக்­கூ­டும்," என்று கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­

கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு ஓங் கூறி­னார்.

இம்­மா­தம் இறு­தி­யி­லி­ருந்து ஐந்து வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறார், ஃபைசர் பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம். புதிய தடுப்­பூசி மருந்­து­கள் சிங்­கப்­பூர் வந்­த­தும் இப்­பி­ரி­வி­ன­ருக்­கான தடுப்­பூசி போடும் திட்­டம் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மற்­ற­வர்­க­ளை­விட இப்­பி­ரி­வி­ன­ருக்­குக் குறை­வான அள­வி­லான தடுப்­பூசி போடப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 12 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ருக்­குச் செலுத்­தப்­படும் அள­வை­விட மூன்­றில் ஒரு பகுதி மட்­டுமே ஐந்து வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ருக்­குப் போடப்­படும்.

முதல் தடுப்­பூசி போட்டு குறைந்­தது 21 நாள்­கள் கழித்து இரண்­டா­வது தடுப்­பூசி போடப்­படும்.

இது­கு­றித்து கூடு­தல் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என்­றார் திரு ஓங். இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களை உட­ன­டி­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி அமைச்­சர் ஓங் கேட்­டுக்­கொண்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தகுதி பெறு­ப­வர்­கள் உட­ன­டி­யாக அதைப் போட்­டுக்­கொள்­வது நல்­லது என்று அவர் ஊக்­கு­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மருந்­தைக் காட்­டி­லும் மொடர்னா தடுப்­பூசி மருந்து அதி­கம் இருப்­ப­தாக அமைச்­சர் ஓங் கூறி­னார். அடுத்த ஆண்டு ஜன­வரி மாதத்­தில் கூடு­தல் தடுப்­பூசி மருந்து

சிங்­கப்­பூர் வந்­த­டை­யும் என்று அவர் தெரி­வித்­தார்.

"காலம் தாழ்த்­தா­மல் உட­ன­டி­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி பொது­மக்­களை சுகா­தார அமைச்சு கேட்­டுக்­கொள்­கிறது. பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தகுதி பெற்­றால் உட­ன­டி­யாக அதைப் போட்­டுக்­கொள்­ள­வும். அது எந்த வகை பூஸ்­டர் தடுப்­பூசி மருந்­தாக இருந்­தா­லும் சரி. இதுவே ஓமிக்­ரானை எதிர்­கொள்­ளத் தயா­ரா­வ­தற்கு ஒரே வழி," என்று அமைச்­சர் ஓங் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர் ஊழி­

ய­ர­ணி­யில் 97 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் இம்­மா­தம் 5ஆம் தேதி நில­

வ­ரப்­படி 75,000 ஊழி­யர்­கள் மட்­டுமே இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றும் மனி­த­வள அமைச்சு கூறி­யது.

153,000 அர­சாங்க அதி­கா­ரி­களில் 99 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.