இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் இதுவரை 36 பேர் பாதிப்பு

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் இதுவரை 36 பேர் பாதிப்பு

1 mins read
a4ed7cdc-9f13-4bbf-8db2-bb2a66f506f5
நவம்பர் 30ஆம் தேதி, மும்பை ரயில் நிலையத்தில் காணப்படும் பயணிகள். படம்: இபிஏ -

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. சண்டிகர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக தலா ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தம்முடைய உறவினர்களைப் பார்க்க இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளையர் ஒருவருக்குத் தொற்று உறுதியானது.

அயர்லாந்தில் இருந்து ஆந்திரப் பிரதேசம் திரும்பிய ஆடவர் ஒருவரிடமும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அவர் தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ளார்.

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. ஓமிக்ரான் தொற்றைப் பதிவுசெய்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது.

உலகளவில் ஓமிக்ரான் திரிபு குறைந்தது 59 நாடுகளில் பரவியுள்ளது.