கட்டுப்பாடுகள் மேலும் தளரும் என வல்லுநர்கள் நம்பிக்கை

கட்டுப்பாடுகள் மேலும் தளரும் என வல்லுநர்கள் நம்பிக்கை

1 mins read
b74f7567-0eeb-4826-8076-15c60542f81a
-

சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் அகலும் சூழ்நிலை விரைவில் ஏற்படும் என்று வல்லுநர்கள் கருத்து கூறி இருக்கிறார்கள்.

இப்போதைய சூழ்நிலையையும் கடந்த மூன்று வார நிலவரங்களையும் கருத்தில்கொண்டு பார்க்கையில், கட்டுப்பாடுகள் அகலுவதற்கான வாய்ப்புகள் விரைவில் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஓமிக்ரான் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும் என்றாலும் சில ஊக்கமூட்டும் அறிகுறிகள் தெரிவதாக அவர்கள் கூறினர்.

மேலும் பலருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் வரை அல்லது சிறார்களுக்குத் தடுப்பூசி போடும்வரை அதிகாரிகள் காத்திருந்தாலொழிய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து வைத்திருக்க வேறு காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத் துறை துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் கூக் கூறுகிறார்.

சிங்கப்பூர் விரைவில் மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடிய ஒரு நிலையை நோக்கி செல்கிறது என்பது பெரும்பாலும் நிச்சயம் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்தார்.