கடைத்தொகுதி, ஆலைகளுக்கு தற்காலிக மாறா மின்கட்டணம் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவு

மின்­சா­ரக் கட்­டண விலை­யேற்­றத்­தி­னால் ஏற்­படும் பாதிப்­பைக் குறைக்க அதிக அள­வில் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும் கடைத்­தொ­கு­தி­கள், உற்­பத்தி ஆலை­கள் போன்ற பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு உதவ, புதிய ஏற்­பாடு ஒன்றை எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் நேற்று அறி­வித்­துள்­ளது.

புதிய தற்­கா­லிக எரி­சக்தி ஒப்பந்த ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ், முன் நிர்­ண­யிக்­கப்­பட்ட கட்­ட­ணத்­தைச் செலுத்­த­லாம்.

இதன்­படி கிலோ­வாட்­டுக்கு ((kWh) அதி­க­பட்ச கட்­ட­ணம் 39.7 காசாக இருக்கும்.

பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கும் மின்­சார விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளுக்­கும் இடை­யி­லான பேரப் பேச்­சு­க­ளின்­போது கட்­ட­ணம் உறு­தி­செய்­யப்­படும். இத்­திட்­டத்­தில் இடம்­பெ­றும் மின்­சார விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளான 'கெனெக்கோ', 'செம்­கார்ப் பவர்', 'செனோக்கோ எனர்ஜி சப்­ளை' ஆகிய நிறு­வ­னங்­கள் இடம்­பெ­று­கின்­றன என்று எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் கூறி­யது.

மாறா விலை அடிப்­ப­டையிலான இந்த ஒப்­பந்­தம் 2022 ஜன­வரி மாதம் வரை செல்­லு­ப­டி­யா­கும்.

எனி­னும், தேவை இருந்­தால் இந்த ஒப்­பந்­தம் நீட்­டிக்­கப்­ப­ட­லாம்.

திட்­டத்­தில் இடம்­பெ­று­வது கட்டா­ய­மல்ல.

ஏறி இறங்­கும் மின்­சா­ரக் கட்­ட­ணத்­தின் பாதிப்­பைக் குறைக்க விரும்­பும் அதே­நே­ரத்­தில், மின்சார ஒப்­பந்­தங்­களை உறு­தி­செய்வதில் சிர­மத்தை எதிர்­கொள்­ளும் நிறு­வனங்­க­ளுக்கு இத்­திட்­டம் நல்ல தெரி­வாக இருக்­கும் என்­றது ஆணை­யம்.

சரா­ச­ரி­யாக மாதத்­திற்கு குறைந்­தது 4,000 கிலோ­வாட் யூனிட் மின்­சா­ரத்தைப் பயன்­படுத்து­வோர் பெரிய பய­னீட்­ட­ளர்­களாகக் கரு­தப்­ப­டு­கின்­ற­னர். 4,000 கிலோ­வாட் மின்­சா­ரம் என்பது, நான்­கறை அடுக்­கு­மாடி வீடு பயன்­ப­டுத்­தும் சரா­சரி மாதாந்­தி­ரப் பய­னீட்­டைக் காட்­டி­லும் பத்து மடங்கு அதி­கம். கடைத்­தொ­குதி­கள் போன்ற பெரிய வர்த்­த­கக் கட்­ட­டங்­கள் பெரிய பய­னீட்­டா­ளர்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன.

தற்­போது இந்­தப் பய­னீட்­டா­ளர்­கள், சில்­லறை விற்­ப­னை­யாளர் ­க­ளி­ட­மி­ருந்து அல்­லது, ஒவ்வோர் அரை மணி நேரத்­திற்கு மாறும் விலை­க­ளைக் கொண்ட மொத்த விற்­பனை சந்­தை­யிலிருந்தே மின்­சா­ரத்தை வாங்­க­ வேண்­டும்.

குடும்­பங்­க­ளுக்கு மூன்­றா­வது தெரிவு உள்­ளது. 'சிங்­கப்­பூர் பவர்' குழு­மத்­தி­டம் இருந்து நெறிப்­படுத்­தப்­பட்ட கட்­ட­ணத்­தில் மின்­சாரத்தை வாங்­க­லாம். இதற்கான கட்டணம் தற்­போது கிலோ­வாட்­டுக்கு 25.80 காசாக உள்­ளது.

சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­களு­டன் பேரம் பேசும் வலு உள்­ள­தால், அதி­க­ள­வில் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் இந்தச் சேவையைப் பெறமுடியாது.

அக்­டோ­பர் மாதத்­தில் சிங்கப்பூர் உள்பட உலக நாடு­கள் எரி­சக்தி நெருக்­க­டியை எதிர்­கொண்­டன. மொத்த விநி­யோ­கச் சந்­தை­யில் மின்­சா­ரத்­தின் சரா­சரி விலை யூனிட்­டுக்கு 50 காசாக உயர்ந்­தது. செப்­டம்­ப­ரில் இந்த விலை 16 காசாக இருந்­தது.

பய­னீட்­டா­ளர்­களில் கிட்­டத்­தட்ட ஒரு விழுக்­காட்­டி­னர் மொத்த விநி­யோ­கச் சந்­தை­யில்­இருந்து நேர­டி­யாக மின்சாரம் வாங்­கு­கின்­ற­னர்.

தற்­போ­தைய உல­க­ளா­விய எரி­சக்தி நெருக்­க­டி­யில், எரி­சக்தி விலை அதி­க­ரிப்­பி­லி­ருந்து சிங்­கப்­பூர் முற்­றி­லும் தப்­பி­விட முடி­யாது என்றார் வர்த்­தக, தொழில் இரண்­டா­ம் அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங்.

"ஆனால், பய­னீட்­டா­ளர்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான மின்­சா­ரத்­தை­யும் திட்­டங்­க­ளை­யும் பெறு­வதை சிங்­கப்­பூ­ரால் தொடர்ந்து உறு­தி­செய்ய முடி­யும். இந்த வகை­யில் புதிய திட்­டம் மற்­றொரு படி­யா­கும்," என்­றார் அவர்.

"பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பய­னீட்­டா­ளர்­கள், அதி­க­ரிக்­கும் செல­வு­களைச் சமா­ளிக்க ஆத­ரவு அளிக்­கப்­படும். பய­னீட்­டா­ளர்­களும் தங்­க­ளால் இயன்­ற­வரை மின்­சாரத்தைச் சிக்­க­ன­மா­கப் பயன்­படுத்தி, மின்­சா­ரத்­தைச் சேமிப்­ப­தில் உதவு­வார்­கள் என்று நம்புகிறோம்," என்று டாக்­டர் டான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!