'பிரபஞ்ச அழகி' மகுடம் சூடிய இந்தியாவின் ஹர்னாஸ்

1 mins read
3efe9ce5-75fa-4bd9-9bb0-2e361a0891c0
-

இந்த ஆண்­டின் பிர­பஞ்ச அழகி­யாக (மிஸ் யுனி­வர்ஸ்) இந்­தி­யா­வின் 21 வயது ஹர்­னாஸ் சந்து மகுடம் சூடி­யுள்­ளார். இஸ்­ரே­லில் நேற்று நடந்த ­போட்டியில் 80 அழகி­களுடன் போட்­டி­யிட்டு ­இந்த அண்டத்தின்

பேர­ழ­கி­யாக ஹர்னாஸ் தேர்வு பெற்றார். நிர் வாகத்துறையில் முது­கலை பயிலும் ஹர்னாஸ் பஞ்­சாப் மாநி­லத்­த­வர். பாலஸ்தீன ஆதர வாளர்களின் நெருக்கடிக்கும் கொரோனா சூழலுக்கும் இடையே 70வது பிரபஞ்ச அழகிப் போட்டி முதல் முறையாக இஸ்ரேலில் நடந்துள்ளது.

பிர­பஞ்ச அழ­கிப் பட்­டத்தை இந்­தியா 21 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மூன்­றா­வது முறை­யாக வென்­றுள்­ளது. 1994ல் சுஷ்­மிதா சென்னும் 2000ல் லாரா தத்தாவும் இப்பட்டத்தை வென்றனர்.

சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த நந்திதா: பக்.4