50 விழுக்காடு ஊழியர்கள் வேலையிடத்துக்குத் திரும்பலாம்

50 விழுக்காடு ஊழியர்கள் வேலையிடத்துக்குத் திரும்பலாம்

1 mins read
085c555a-bff0-4c52-9a6d-c032bca3f312
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர், ஜனவரி முதல் தேதியில் இருந்து அலுவலகத்துக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படுவர்.

சிங்கப்பூர் ஊழியரணியில் 97 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், கூடுதலானோர் இனி வேலையிடம் திரும்ப முடியும்.

என்றாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு கொவிட்-19 பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனத் தெரியும் பட்சத்தில் அவர்கள் வேலையிடம் திரும்புவதற்கு வழங்கப்படும் சலுகையை மீட்டுக்கொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

வேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரான் திரிபால், டெல்டா திரிபு ஏற்படுத்திய பாதிப்பைவிட மோசமானதாக இருக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

எனவே, தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை சிங்கப்பூர் தொடர்ந்து கட்டிக்காக்கும் என்ற அவர், ஓமிக்ரானுக்கு எதிராக சிங்கப்பூர் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவதாகச் சொன்னார்.