ஓமிக்ரான் அலைக்கு தயாராகும் சிங்கப்பூர்

ஓமிக்ரான் அலைக்கு தயாராகும் சிங்கப்பூர்

3 mins read

உல­க­மெங்­கும் வேக­மா­கப் பரவி வரும் ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மி­ வ­கையை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வரும் வேளை­யில் ஓமிக்­ரான் அலை ஏற்­பட்­டால் அதைச் சமா­ளிக்க இந்த நட­

வ­டிக்­கை­கள் உத­வும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக மருத்­து­வ­ம­னை­களில் உள்ள படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கை­யும் பரி­சோ­த­னை ஆற்றலும் அதி­

க­ரிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை யாருக்­கும் சமூக அள­வில் ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்­ற­போ­தி­லும் கூடிய விரை­வில் அத்­த­கைய நிலை ஏற்­படும் என்று நேற்று நடை­பெற்ற கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­னார்.

"சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் யாரா­வது ஒரு­வ­ருக்­கு ஓமிக்­ரான்

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென உய­ரக்­கூ­டும். ஓமிக்­ரா­னின் மிக எளி­தில், வேக­மா­கப் பர­வும் தன்­மையே இதற்­குக் கார­ணம். எனவே, அத்­த­கைய சூழ­லுக்கு நாம் தயா­ராக இருக்க வேண்­டும்.

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி ­வகை வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்­ப­தால் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூசி தொடர்­பில் வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் கூடு­தல் இடங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­படும். அதே வேளை­யில், சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யில் 97 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தால் வேலை­யி­டங்­க­ளுக்­குத் திரும்ப கூடு­தல் ஊழி­யர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும். அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து வேலை­யி­டங்­க­ளுக்­குத் திரும்ப தற்­போது வீட்­டில் வேலை செய்­து­ வ­ரு­வோ­ரில் 50 விழுக்­காட்­டி­ன­ருக்கு அனு­மதி வழங்­கப்­படும்.

இந்­நி­லை­யில், கொவிட்-19 பரி­சோ­தனை செய்து கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­படும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் வேலை­யி­டம் திரும்ப வழங்­கப்­பட்ட சலு­கையை ரத்து செய்­வது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லனை செய்து வரு­வ­தாக நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை 16 பேருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. பாதிக்கப்­பட்­டோ­ரில் 14 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள். எஞ்­சிய இரு­வர் சாங்கி விமான நிலை­யத்­தில் பய­ணி­கள் சேவைப் பிரி­வில் பணி­பு­ரி­யும் இரண்டு உள்­ளூர் ஊழி­யர்­கள்.

டெல்டா கொவிட்-19 கிரு­மி­யை­விட பெரிய அள­வி­லான கொவிட்-19 அலையை ஓமிக்­ரான் கிரு­மி­வகை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று திரு வோங் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

எனவே, தற்­போது நடப்­பில் உள்ள பாது­காப்பு நிர்­வாக நட­

வ­டிக்­கை­கள் தொட­ரும் என்­றார் அவர். அடுத்த கொவிட்-19 அலைக்­குத் தயா­ரா­கும் வகை­யில் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் உள்ள படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை 500ஆக உயர்த்த நட­

வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தாக மருத்­து­வச் சேவை­கள் இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்,

இதைச் சாத்­தி­ய­மாக்க பொது மருத்­து­வ­ம­னை­க­ளின் உள்­கட்­ட­மைப்பு மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா என்­பது குறித்து ஆரா­யப்­

ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

கடந்த அக்­டோ­பர் மாதத்­தின் இறு­திக்­கட்­டத்­தில் டெல்டா கொவிட்-19 கிரு­மித்­தொற்று உச்­சக்­கட்­டத்­தில் இருந்­த­போது தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் ஏறத்­தாழ 280 படுக்­கை­கள் இருந்­தன. படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை 350ஆக உயர்த்த மருத்­து­வ­ம­னை­கள் அப்­போது தயார்­நி­லை­யில் இருந்­தன. தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தொடர்ந்து நடத்­து­வது, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் திறன்­களை அதி­க­ரிப்­பது, அடிக்­கடி பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் பழக்­கத்தை ஊக்­கு­விப்­பது ஆகி­யவை எவ்­வாறு நடை­மு­றைப்­

ப­டுத்­தப்­படும் என்­பது குறித்து பணிக்­குழு தெரி­வித்­தது.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற தேவை­யில்­லாது, வீட்­டி­லேயே குண­ம­டை­யக்­கூ­டி­யோ­ருக்கு உத­வு­வ­தில் தனி­யார் மருத்­து­வர்­க­ளின் பங்­க­ளிப்பு அதி­கம் இருக்­கும். அது­மட்­டு­மல்­லாது, சமூக சிகிச்சை நிலையங்களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும். இதன்­மூ­லம் சீரான உடல்­நிலை கொண்ட நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து அங்கு அனுப்­பப்­ப­ட­லாம். மேலும் 60 விரைவுப் பரி­சோ­தனை நிலை­யங்­கள் அமைக்­கப்­படும். அவற்றை தனி­யார் நிறு­வ­னங்­கள் நடத்­தும். இதன்­மூ­லம் கொவிட்-19 பரி­சோ­த­னையை அனை­வ­ரும் எளி­தில் செய்­து­கொள்­ள­லாம்.

ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை எளிதில் அடையாளம் காண கட்டாய பரிசோதனைகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மானியம் வழங்கப்படும்.