சிங்கப்பூர் குடிமக்கள் கடற்பாலம் வழி மலேசியா செல்லலாம்

சிங்கப்பூர் குடிமக்கள் கடற்பாலம் வழி மலேசியா செல்லலாம்

2 mins read
6b34c479-850d-477e-aeab-5647033660ee
குடும்­பத்­தி­னரை நேரில் பார்க்க முடி­யா­மல் நீண்ட நாள்­க­ளா­கத் தவித்து வரு­ப­வர்­களை ஒன்றுசேர வைப்­பதே இந்­தத் தனி­மைப்­ப­டுத்த தேவை­யில்­லாப் பய­ணத் திட்­டத்­தின் பிர­தான நோக்­கம்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தரை எல்லை வழி­யாக தனிமை உத்­த­ர­வில்­லா­மல் சென்று வரக்­கூ­டிய பய­ணத் திட்­டத்தை (விடி­எல்) விரிவு­ப­டுத்­து­கின்­றன.

இதன் விளை­வாக இம்மாதம் 20ஆம் தேதி­யில் இருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூர் குடி­மக்­கள் கடற்­பா­லம் வழி­யாக மலே­சி­யா­வுக்குச் சென்று வர முடி­யும்.

அதே­போல தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மலே­சிய குடி­மக்­களும் கடற்­பா­லம் வழி சிங்­கப்­பூ­ருக்கு வந்து செல்ல முடி­யும்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் திட்ட விரி­வா­கத்­தின்கீழ் இது சாத்­தி­ய­மா­கிறது.

இப்­போது சிங்­கப்­பூ­ரின் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் நீண்­ட­கால அனு­ம­தி­ அட்டை வைத்திருப் போர் மட்­டுமே இங்கு வர இந்த ஏற்­பாட்­டின்கீழ் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

அதே­போல, மலே­சிய நாட்­டின் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் நீண்­ட­கால அனு­ம­தி­ அட்டை வைத்திருப்போர் மட்­டும் மலே­சியா செல்ல முடி­யும்.

இந்­தப் பயண ஏற்­பாட்­டின்கீழ், சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பரி­சோ­தனை ஏற்­பா­டு­களில் எந்த மாற்­ற­மும் இருக்­காது என்று வர்த்­தக, தொழில் அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் அனை­வ­ரும் நடப்­பில்

இருக்­கக்­கூ­டிய பரி­சோ­தனை நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும். பாது­காப்பு நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு அவர்­கள் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

எடுத்­துக்­காட்­டாக, சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனைத்­துப் பய­ணி­களும் இங்கு வந்ததும் ஏழு நாள் கொவிட்-19 ஏஆர்டி பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

ஏழா­வது நாள் வரை அவர்­கள் சுய­மாக ஏஆர்டி பரி­சோ­த­னையை அன்­றா­டம் செய்து கொள்ள

வேண்­டும்.

மூன்­றா­வது நாளி­லும் ஏழா­வது நாளி­லும் அவர்­கள் பரி­சோ­தனை நிலை­யத்­துக்­குச் சென்று பரி­சோ­தித்­துக் கொள்­ள­வேண்­டும்.

அதே­போல, மலே­சியா செல்­வோர், அந்த நாட்­டின் நடப்பு விதி­மு­றை­க­ளுக்கு இணங்க, ஆறு நாட்­க­ளுக்கு அன்­றாட பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­பட வேண்­டும்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடைப்­பட்ட விடி­எல் பய­ணத் திட்­டம் நவம்­பர் 29ல் தரை­வ­ழி­யா­க­வும் ஆகாய வழி­யா­க­வும் தொடங்­கி­யது.

இத­னி­டையே, கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், தனிமை உத்­த­ர­வில்­லாத பய­ணத் திட்­டத்­திற்கு எந்த அள­வுக்­குத் தேவை இருக்­கிறது என்­பதை அதி­கா­ரி­கள் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வார்­கள் என்று கூறி­னார். அதற்­கேற்ப அவர்­கள் திருத்­தங்­க­ளைச் செய்­வார்­கள் என்­றார் அவர்.

செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் திட்­டம் விரி­வ­டை­கிறது என்­றா­லும் இது இரு நாடு

களுக்­கும் இடை­யில் எல்­லை­களை முற்­றி­லும் திறப்­ப­தாக இராது என்­றார். இப்­போ­தைய தரை­வழி விடி­எல் ஏற்­பாட்­டின்­படி இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட 64 பேருந்து சேவை­கள் வழி­யாக 2,880 பேர் பய­ணம் செய்ய வரம்பு உள்­ளது.

குடும்­பத்­தி­னரை நேரில் பார்க்க முடி­யா­மல் நீண்ட நாள்­க­ளா­கத் தவித்து வரு­ப­வர்­களை ஒன்றுசேர வைப்­பதே இந்­தத் தனி­மைப்­ப­டுத்த தேவை­யில்­லாப் பய­ணத் திட்­டத்­தின் பிர­தான நோக்­கம் என்று திரு கான் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், ஒன்­றுக்­குப் பல­முறை யோசித்த பிறகு மலே­சி­யா­வுக்­குத் தரை­வழி பய­ணத்தை மேற்­கொள்­ள­வும் அவர் சிங்­கப்­

பூ­ரர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.