வெளிநாட்டு மாணவர்கள், குடியேறிகள் இன்று முதல் ஆஸ்திரேலியா செல்லலாம்

1 mins read
8f92d610-24d5-4b62-a805-c4c04ba2c52f
முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட திறன் பெற்ற குடியேறிகளும் வெளிநாட்டு மாணவர்களும் ஆஸ்திரேலியாவுக்குள் இன்று (டிசம்பர் 15) முதல் நுழையலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தனது எல்லைகளை, ஆஸ்திரேலியா விசா அனுமதி பெற்றவர்களுக்காக மீண்டும் திறந்துள்ளது.  -

முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட திறன் பெற்ற குடியேறிகளும் வெளிநாட்டு மாணவர்களும் இன்று (டிசம்பர் 15) முதல் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தனது எல்லைகளை, ஆஸ்திரேலியா விசா அனுமதி பெற்றவர்களுக்காக மீண்டும் திறந்துள்ளது.

டிசம்பர் 1 முதல் நாட்டுக்குள் விசா பெற்ற அனைத்துலகப் பயணிகளை மீண்டும் அனுமதிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டிருந்தது.

ஆனால் ஓமிக்ரான் பரவல் அச்சத்தால் திட்டத்தை இரண்டு வாரங்களுக்கு அது தள்ளி வைத்தது.

எல்லைகள் இன்று திறக்கப்படும் என்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் இரண்டு நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் தங்களை 72 மணிநேரத்துக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அனைத்துலகப் பயணிகளை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

குவீன்ஸ்லாந்து, டாஸ்மேனியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் எல்லைகளைத் திறந்து வருகின்றன.