ஒசாக்கா நகரில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் குறைந்தது 27 பேர் பலியாகி இருக்கலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம், அந்நகரின் மனநல மருந்தகம் ஒன்றில் நேர்ந்தது.
ஒன்பது பேர் மருத்துவமனையில் மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஒருவர் காயமடைந்தார்.
சிங்கப்பூர் நேரப்படி காலை ஒன்பது மணிக்கு மருந்தகம் திறக்கப்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு தீ மூண்டது.
முப்பது நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக என்ஹெச்கே செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் வேண்டுமென்றே தீயை மூட்டியதாகச் சந்தேதிக்கப்படுகிறது.
வயதான ஆடவர் ஒருவர் வைத்திருந்த பையிலிருந்து தீப்பிடிக்கக்கூடிய திரவம் கசிந்ததாகவும் அதனால் தீ மூண்டதாகவும் தகவல்கள் கூறின.
காவல்துறையினர் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.

