ஆசிரியரை மகிழ்வித்த மாணவரின் தேர்ச்சி

2 mins read
f526d427-e85a-4e0f-a3d1-cec5c03f19a1
தமது தாய் திருவாட்டி ரேவதி இளங்கோவன் மற்றும் தம்பி கவினேஷ் ரூபன் ஆகியோருடன் மாணவர் நட்டேஷ் ரூபன். படம்: திமத்தி டேவிட் -

பிள்­ளைப் பரு­வத்­தி­லி­ருந்தே ஒற்­றை­ப் பெற்றோரான தம் தாயா­ருக்­குத் தைரி­ய­மூட்டி, தம்­பிக்­குத் தட்­டிக்­கொ­டுத்த நட்டேஷ் ரூபன், 16, தமக்கு நெருக்­க­மா­னோர் அனை­வ­ரை­யும் பெரு­மைப்­ப­டுத்­தும் வித­மாக இந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வில் ஏழு புள்­ளி­க­ளுடன் சிறந்த தேர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார்.

இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் பாட அட்­ட­வணை தயா­ரித்து அதன்­படி செயல்­பட்­டது நல்ல பல­னைத் தந்­தி­ருப்­ப­தாக மெரி­டி­யன் உயர்­நி­லைப் பள்ளி மாண­வ­ரான நட்டேஷ் தெரி­வித்­தார்.

முந்­தைய ஆங்­கி­லத் தேர்­வு­களில் தொடர்ந்து 'பி3' எடுத்து வந்த வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்வி மாண­வர் நட்டேஷ், ஆங்­கி­லத் தேர்வுத்தாள்­களை அதி­கம் பயிற்சி செய்­த­து­டன், தர­மான ஆங்­கி­லக் கட்­டு­ரை­க­ளைத் தொடர்ந்து படித்­தார்.

மொழித்­தி­ற­னைச் சரி­யா­கக் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்ற ஆர்வத்தால் சுய­மா­கவே அக்கட்­டு­ரை­க­ளின் மொழிக்­கூ­று­களை ஆராய்ந்­த­தா­க­வும் நட்டேஷ் தெரி­வித்­தார். 'என்' நிலைத் தேர்வில் நடேஷ் பெற்ற உச்­ச­பட்ச தேர்ச்­சி­யான 'ஏ1' தம்மை மிக­வும் நெகிழ வைத்­ த­தாக அவ­ரது ஆங்­கில ஆசி­ரி­யர் தன்யா கண்­ணன், 43, கூறினார்.

பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் வழக்­க­நி­லைத் தேர்வு முடி­வு­களை நேற்று பெற்ற 13,635 மாண­வர்­களில் நட்டே­ஷும் ஒரு­வர். 2009 முதல் ஆகச் சிறந்த வழக்­க­நி­லைத் ேதர்ச்சியை இந்த ஆண்டு வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்வி மாண­வர்­கள் பெற்­றுள்­ள­னர்.

கடந்த ஆண்­டைக்காட்­டி­லும் இந்த ஆண்­டின் முடி­வு­கள் பொது­வா­கவே சிறப்பாக உள்­ளன. இந்த ஆண்­டு தேர்­வு­களை எழு­திய 9,407 மாண­வர்­களில் 79.2% உயர்­நிலை ஐந்­திற்­குச் செல்ல தகு­தி­பெற்­ற­னர். இந்த விழுக்­காடு கடந்­தாண்டு 77.7 விழுக்­கா­டாக இருந்­தது.

2009ஆம் ஆண்டு உயர்­நிலை ஐந்­துக்­குத் தேர்ச்சிபெறும் தகு­தி ­நிலை மாற்­றப்­பட்­டதை அடுத்து அதிகமான எண்ணிக்கை இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமாகும். 2009ல் தேர்வு எழு­திய மாண­வர்­களில் 71.1% உயர்­நிலை ஐந்­துக்­குத் தகு­தி­பெற்­ற­னர். இந்த விகி­தம் படிப்­ப­டி­யாக ஏறு­மு­க­மாக உள்­ளது.

வழக்­க­நிலை (ஏட்­டுக்­கல்வி) மாண­வர்­களும் வழக்­க­நிலை (தொழில்­நுட்­பம்) மாண­வர்­களும் எழு­திய தேர்­வின் முடி­வு­க­ளைக் கல்­வி­ய­மைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு, மதிப்­பீட்­டுக்கழ­க­மும் வெளியிட்­டன. தேர்வு எழு­திய 4,228 வழக்­க­நிலை தொழில்நுட்ப மாண­வர்­களில் 98.1% தேர்ச்சியடைந்­த­னர்.

மேலும் செய்தி: பக்கம் 4