உலகிற்கு பெரும் அச்சுறுத்தல்

உலகிற்கு பெரும் அச்சுறுத்தல்

1 mins read

ஓமிக்­ரான் தொற்று உல­கின் பொது சுகா­தா­ரத்­திற்­கு தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கும் ஆகப்­பெ­ரிய அச்­சு­றுத்­தல் என்று ஜி-7 எனப்­படும் ஏழு நாடு­

க­ளின் கூட்­ட­மைப்பு தெரி­வித்துள்­ளது. இது­வரை இல்­லாத அள­வுக்கு ஒவ்­வொரு நாடும் மற்ற நாடு­க­ளு­டன் இணைந்து செயல்­பட வேண்­டிய அவ­ச­ர­நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அது கூறி­யுள்­ளது.

"தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் அதி­க­ரிப்­பால் பெருங்­க­வலை எழுந்­துள்­ளது. இந்­தப் புதிய தொற்று உல­கின் பொது சுகா­தா­ரத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­கும் அச்­சு­றுத்­தல் என ஜி-7 சுகா­தார அமைச்­சர்­கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்," என்று ஜி-7 அமைப்­புக்­குத் தலைமை ஏற்­றி­ருக்­கும் பிரிட்­டன் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, பிரிட்­டன் ஏற்­பாட்­டில் ஜி-7 சுகா­தார அமைச்­சர்­கள் சந்­தித்­துப் பேசி­னர். பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­கான அவ­சி­யம் அதி­க­ரித்­துள்­ளதை அவர்­கள் அப்­போது ஒப்­புக்­கொண்­ட­னர்.