மீள்திறன்மிக்க வெளிநாட்டு ஊழியரணியை உருவாக்க பல்லாண்டுத் திட்டம் ஒன்றில் மனிதவள அமைச்சு ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக பல அம்சங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களின் தரம் உயர்த்தப்படும். சிறியதோ பெரியதோ எல்லா வகையான தங்குமிடங்களும் ஒரேமாதிரியான தரத்தைப் பின்பற்றுவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை அதிகாரிகள் வலுப்படுத்துவார்கள்.
ஊழியர்கள் தங்கும் பகுதிகள், அவர்களுக்கான பொதுவான வசதிகள் ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள தங்குமிடங்களுக்குக் கால அவகாசம் வழங்கப்படும். இதன் தொடர் பில் அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியில் அதிகமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
இவை அனைத்தும் அமைச்சு தீட்டியுள்ள பல்லாண்டுத் திட்டத்தின் ஒருபகுதி. இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு தரமிக்க, எளிதில் அணுகக்கூடிய, தங்கு
தடையில்லாத, கட்டுப்படியாகக்
கூடிய சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்க இரட்டிப்பு முயற்சிகளை அமைச்சு மேற்கொள்ளும்.
அத்துடன், சமூக ஈடுபாட்டை அதிகப்படுத்துவது, பொழுதுபோக்கு நிலையங்களை மேம்படுத்துவது போன்றவை மூலம் வெளிநாட்டு ஊழியர்களின் சமூகநலனையும் அமைச்சு ஊக்குவிக்கும்.
இந்த விவரங்களை சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியரணியின் தொலைநோக்குத் திட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி, சிங்கப்பூருக்குள் நுழைந்தது முதல் தங்களது தாய்நாட்டுக்குத் திரும்புவதுவரை வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் நடைமுறைத் திட்டத்தை அப்போது அவர் விவரித்தார். படிப்படியான முன்னேற்றத்தை இந்த நடைமுறைத் திட்டம் கொண்டி ருக்கும். பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து, நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்துடன் மறுபடி ஒருங்கிணைவதற்கான திட்டங்களையும் அமைச்சு வகுத்து வருகிறது.
இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களில் 98% முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதியுள்ளோரில் 88 விழுக்காட்டினர் அதனைப் போட்டுக்கொண்டனர். கூடுதல் கட்டுப்பாட்டுத் தளர்வு
களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டறிவதன் அவசியம் குறித்து டாக்டர் டான் வலியுறுத்தினார். கட்டுப்பாடு
களைத் தளர்த்துவது என்பது உணர்வின் அடிப்படையில் அமையக்கூடாது என்றார் அவர்.
தங்குவிடுதிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு முன்னர் ஓமிக்ரான் நிலவரத்தை தமது அமைச்சு அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றார் அவர்.

