மலேசிய விபத்தில் எட்டு சிறுவர் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மலே­சி­யா­வில் பல்­வேறு வாக­னங்­கள் மோதிக்­கொண்ட விபத்­தில் பத்­துப் பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­களில் எட்­டுப் பேர் சிறு­வர்­கள். இலிட் விரை­வுச்­சா­லை­யில் வெள்­ளிக்­கி­ழமை இரவு 11.42 மணிக்கு விபத்து நடந்­த­தாக சிலாங்­கூர் தீய­ணைப்பு, மீட்­புத்­துறை இயக்­கு­நர் நோர்­ஸாம் கமிஸ் கூறி­னார்.

தக­வல் கிடைத்­த­தும் தீய­ணைப்பு, மீட்பு வாக­னங்­கள் அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் அவை இரவு 11.54 மணிக்­கெல்­லாம் சம்­பவ இடத்தை அடைந்­து­விட்­ட­தா­க­வும் அவர் நேற்று தெரி­வித்­தார்.

இழுவை லாரி­யும் மூன்று கார்­களும் ஒன்­றோ­டொன்று மோதிக்­கொண்­ட­தா­கக் கூறிய அவர், மோதிய கார்­களில் ஒன்­றான புரோட்­டோ விராஸ் காரின் ஓட்­டு­நர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

கார் ஒன்றை நசுக்­கிய நிலை­யில் இருந்த இழுவை லாரியை அப்­பு­றப்­ப­டுத்த பாரந்­தூக்கி வர­வ­ழைக்­கப்­பட்­டது. மற்­றொரு காரில் இருந்த ஆட­வர் ஒரு­வ­ரின் கால் முறிந்­தது.

ஓர் ஆட­வர், ஒரு பெண், ஐந்து சிறு­வர்­கள், மூன்று சிறு­மி­யர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அவர்­க­ளின் உடல்­கள் பிரே­தப் பரி­சோ­த­னைக்­காக ஷா அலாம் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டன.

இழுவை லாரி ஓட்­டு­ந­ரும் அவ­ரு­டன் இருந்த இரு பிள்­ளை­களும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர்­தப்­பி­னர். விபத்­தில் சம்­பந்­தப்­பட்ட 17 பேரில் 10 பேர் மாண்டு­விட்­ட­தா­க­வும் மீட்­புப் பணி­கள் பின்­னி­ரவு 2.40 மணி வரை நீடித்­த­தா­க­வும் திரு நோர்­ஸாம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!