சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.
"தகுதியுள்ளோரில் 96 விழுக்காட்டினர் முழுமை
யாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். உங்கள்
ஒத்துழைப்புக்கு நன்றி.
சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்
களின் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
குறிப்பாக, ஓமிக்ரான் தொற்று எங்கும் பரவி
வரும் நிலையில் இதனைச் செய்வது அவசியம்," என்று அவர் தமது ஃபேஸ்புக்கில்
தெரிவித்துள்ளார்.

