அக்டோபர் மாத அதிகரிப்பை முறியடித்து நவம்பரில் பணவீக்கம் தொடர்ந்து ஏற்றம் மேலும் மேலும் உயரும் விலைகள்

அக்டோபர் மாத அதிகரிப்பை முறியடித்து நவம்பரில் பணவீக்கம் தொடர்ந்து ஏற்றம் மேலும் மேலும் உயரும் விலைகள்

3 mins read

அக்­டோ­பர் மாதத்­தில் பல ஆண்டு ­க­ளுக்­குப் பின்­னர் அதி­க­ளவு ஏற்றம் கண்ட சிங்­கப்­பூ­ரின் ஒட்டு­மொத்தப் பண­வீக்­க­மும் மூலா­தாரப் பண­வீக்­க­மும் நவம்­பர் மாதத்­தில் மேலும் அதிகரித்துள்ளன.

பொரு­ளா­தார வல்­லு­நர்­கள் கணித்­த­தை­விட இரண்டு அளவு­கோல்­களும் அதி­க­மாக உயர்ந்­துள்­ளன.

வாடகை மற்­றும் தனி­யார் சாலைப் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள் தவிர்த்த மூலா­தா­ரப் பண­வீக்­கம், அக்­டோ­ப­ரின் 1.5 விழுக்­காட்­டி­லி­ருந்து கடந்த மாதம் 1.6 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக தொழில் அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

புளூம்­பெர்க் ஆய்வு, மூலா­தாரப் பண­வீக்­கம் 1.5 விழுக்­காட்­டில் மாறா­மல் இருக்­கும் எனக் கணித்­தி­ருந்­தது.

கடை­சி­யாக மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம் 2019 மார்ச்­சில் 1.7 விழுக்­கா­டாக உயர்ந்­தி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரின் நாண­யக் கொள்கை குறித்த மறு­ஆய்­வு­களுக்கு நாணய ஆணை­யம் மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கும் அள­வு­கோல், பய­னீட்­டா­ளர் விலை­க­ளின் அடிப்­ப­டைப் போக்கை படம்­பி­டித்­துக் காட்­டும் மூலா­தா­ரப் பண­வீக்­க­மா­கும்.

வரும் மாதங்­களில் மூலா­தா­ரப் பண­வீக்­கம் மேலும் உய­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதி­க­ரித்து வரும் இறக்­கு­மதி, மற்றும் ஊழி­யர் செல­வு­களும் உள்­நாட்­டுப் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களின் மீட்சியும் வரும் மாதங்­களில் மூலா­தா­ரப் பண­வீக்­கத்­தின் அதி­க­ரிப்­புக்குப் பங்­க­ளிக்­கும் என்று சிங்கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்தக தொழில் அமைச்­சும் தெரிவித்தன.

எட்டு ஆண்­டு­களில் இல்­லாத அளவுக்கு அக்­டோ­ப­ரில் 3.2 விழுக்­காட்­டாக உயர்ந்த ஒட்டு மொத்த பண­வீக்­கம் நவம்­ப­ரில் மேலும் உயர்ந்து 3.8 விழுக்­காட்­டா­னது.

தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் செலவு அதி­க­ரிப்­பும் மூலா­தா­ரப் பண­வீக்­கத்­தின் உயர்­வும் இந்த ஏற்­றத்­துக்கு கார­ணம். புளூம்­பெர்க் ஆய்­வா­ளர்­க­ளின் 3.4% எனும் கணிப்­பை­விட இது அதிகம்.

தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் செலவு 14.3 விழுக்­காட்­டி­லி­ருந்து 17.9 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

அக்­டோ­ப­ரில் 7.8% ஆக இருந்த மின்­சா­ரம், எரி­வாயு செல­வு­கள் நவம்­ப­ரில் 10% ஆக அதி­க­ரித்­தது. மின்­சா­ரத்­திற்­கான நிலை­யான விலைத் திட்­டங்­களில் இடம்­பெற்­றி­ருந்த குடும்­பங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தது இதற்கு முக்­கிய காரணம்.

தாராள மின்­சா­ரச் சந்­தை­யி­லி­ருந்து சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் வெளி­யே­றி­ய­தால் பாதிக்­கப்­பட்ட வீட்­டுக் கணக்­கு­கள் 'சிங்­கப்­பூர் பவர்' குழு­மத்­திற்கு மாற்­றப்­பட்­டது. தாராள மின்­சா­ரச் சந்­தை­யில், சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­க­ளால் வழங்­கப்­படும் நிலை­யான விலைத் திட்­டங்­கள் பொது­வாக 'சிங்­கப்­பூர் பவர்' குழு­மத்­தால் விதிக்­கப்­படும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­ணத்­தை­வி­டக் குறை­வா­கவே இருக்­கும்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் விமா­னக் கட்­ட­ணங்­க­ளின் வேக­மான அதி­க­ரிப்பு, தொலைத்­தொ­டர்பு சேவை செலவு­களில் மிதமான சரிவு கார­ண­மாக அக்­டோ­பரில் 1.6% ஆக இ­ருந்த சேவைத் துறை செலவு நவம்­ப­ரில் 1.9% ஆக உயர்ந்­தது.

வீட்டு வாட­கை­கள் மிக வேக­மாக அதி­க­ரித்­த­தால், அக்­டோ­ப­ரில் 2.5% ஆக இருந்த தங்­கு­மிடச் செல­வும் சென்ற மாதம் 2.7% ஆனது.

சமைக்­கப்­ப­டாத உண­வுப் பொருட்­க­ளின் விலை­யேற்­றம் கார­ண­மாக உணவுச் செல­வும் நவம்­ப­ரில் 1.9 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது, இது முந்­தைய மாதத்­தில் 1.7% ஆக இருந்­தது. தயாரிக்கப்பட்ட உணவுக­ளின் விலை­யில் மாற்­றம் இல்லை.

அதே­நே­ரத்­தில், சில்­லறை விற்­பனையும் பிற பொருட்­க­ளின் விலையும் கடு­மை­யான சரி­வைக் கண்டுள்ளன. ஆடை, கால­ணி­களின் விலைச் சரி­வி­னால் அக்­டோ­ப­ரில் 0.4% ஆக இருந்த சரிவு நவம்பரில் 0.9% ஆனது.

மூலா­தா­ரப் பண­வீக்கம் 2021ல் சரா­ச­ரி­யாக 0.9% ஆக இருக்­கும் என்­றும், அடுத்த ஆண்டு 1% முதல் 2% வரை அதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக தொழில் அமைச்­சும் இந்த ஆண்­டுக்­கான ஒட்­டு­மொத்த பண­வீக்கக் கணிப்பை 2 விழுக்­காட்­டி­லி­ருந்து 2.3 விழுக்­காட்­டிற்கு உயர்த்­தி­யுள்­ளன. 2022ஆம் ஆண்­டிற்­கான ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 1.5% - 2.5% வரை இருக்கும் என்ற கணிப்பில் மாற்­ற­மில்லை.