ஓமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு மிதமாக இருந்தாலும் இங்கிலாந்துக்கு இன்னும் ஆபத்து நீடிப்பதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கை. இங்கிலாந்துக்கு 'ஓமிக்ரான்' ஆபத்து

ஓமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு மிதமாக இருந்தாலும் இங்கிலாந்துக்கு இன்னும் ஆபத்து நீடிப்பதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கை. இங்கிலாந்துக்கு 'ஓமிக்ரான்' ஆபத்து

2 mins read

'டெல்டா' உரு­மா­றிய கிரு­மி­யை­விட 'ஓமிக்­ரான்' மித­மான பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று ஆரம்ப ஆய்­வு­கள் தெரி­வித்­துள்­ளது நல்ல­செய்தியாக இருந்­தா­லும் அதி­க­ள­வி­லான மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வது இங்­கி­லாந்­தின் தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­புக்கு பெரும் சுமை­யா­கக்கூடும் என அறி­வி­யல் அறி­ஞர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இங்கிலாந்தில் கிருமித்தொற்று பர­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து முதன்­மு­றை­யாக அங்கு புதன்­கி­ழமை அன்று தொற்று 100,000ஐ கடந்தது. 106,122 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

"தற்போதைக்கு கூடு­தல் கட்டுப்­ பாடு­கள் தேவை­யில்லை. ஆனால் கிறிஸ்­­மஸ் கொண்­டாட்­டத்­தின்­போது மக்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­க வேண்டும்," என்று அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் சஜித் ஜாவித் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

கிறிஸ்­ம­சுக்­குப் பிற­கு­தான் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­படும் என்று பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் கூறி­யுள்­ளார்.

இந்த மாதத்­துக்கு முன்­னர் அங்கு அன்­றாட புதிய தொற்று எண்­ணிக்கை சரா­ச­ரி­யாக 70,000 ஆகத்­தான் இருந்­தது. ஆனால் கடந்த ஆறு நாள்­களில் அன்­றாடத் தொற்று எண்­ணிக்கை 90,000க்கும் அதி­க­மாக இருந்து வரு­கிறது.

எனினும் டெல்டா வகைக் கிருமி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஓமிக்­ரான் வகைக் கிரு­மி­யின் பாதிப்பு குறைவு என ஆய்­வு­கள் தெரி­வித்­துள்­ளதை நிபு­ணர்­கள் நற்­செய்தி என்றனர்.

இம்­பீ­ரி­யல் காலேஜ் லண்­டன் மேற்­கொண்ட ஆய்­வு, டெல்டா வகைக் கிருமி தொற்­றி­ய­வர்­க­ளை­விட ஓமிக்­ரான் தொற்­றி­ய­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறும் சாத்­தி­யம் 40% குறைவு என்று கூறியது. தென் ஆப்­பி­ரிக்­கா­வில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு டெல்­டா­வு­டன் ஒப்­பி­டும்­போது ஓமிக்­ரான் கிருமி தொற்­றி­யோருக்கு மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­படும் அபா­யம் 70% முதல் 80% குறைவு என்று தெரிவித்துள்ளது.