பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலி, ஐவர் காயம்; மனித வெடிகுண்டு என ஐயம்

பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலி, ஐவர் காயம்; மனித வெடிகுண்டு என ஐயம்

2 mins read
096f23ab-3e6a-4260-a417-142ca591d0f5
ஆறு மாடிக் கட்டடத்திலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டதும் நீதிமன்றத்திற்கு வெளியே மக்கள் திரண்டனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. படங்கள்: ஏஎஃப்பி, இந்திய ஊடகம் -
multi-img1 of 2

இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் ஒரு­வர் பலி­யான குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வம் மனித வெடி­குண்டுத் தாக் கு­த­லாக இருக்­க­லாம் என லூதி­யானா காவல்­துறை ஆணை­யர் குர்­பி­ரீத் புல்­லர் தெரி­வித்­துள்­ளார்.

பஞ்­சாப் மாநி­லம், லூதி­யா­னா­வி­லுள்ள மாவட்ட நீதி­மன்­றத்­தின் கழி­வ­றை­யில் இந்­திய நேரப்­படி நேற்று ­ப­கல் 12.22 மணி அளவில் இந்த குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

"ஒரு­வ­ரின் உடல் மீட்­கப்­பட்­டுள்­ளது. அவர் வெடி­ம­ருந்தை சுமந்­தி­ருந்­த­வர் அல்­லது அவ­ருக்கு அரு­கில் இருந்­த­வ­ராக இருக்­க­லாம். விசா­ரணை நடந்து வரு­கிறது. காயம்­ அ­டைந்த ஐவ­ரும் அபாய கட்­டத்தைத் தாண்­டி­விட்­ட­னர்," என்று புல்­லர் கூறி­னார்.

ஆரம்­பத்­தில் இரு மர­ணங்­கள் சம்­பவ இடத்­தி­லி­ருந்து பதி­வா­கி­யி­ருந்­தா­லும், வெடிப்­பில் ஒரு மர­ணத்தை காவல் துறை­யி­னர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். குண்­டு­வெடித் ­த­தில் குளி­ய­ல­றை­யின் சுவர்­கள் இடிந்து விழுந்­த­து­டன், சன்­னல் கண்­ணா­டி­களும் நொறுங்­கின.

இதற்குப் பின்­னால் தேசவிரோத சக்­தி­கள் இருப்­ப­தாகச் சம்­பவ இடத்தைப் பார்­வை­யிட்ட பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சிங் சன்னி குற்­றம் சாட்­டி­யுள்­ளார். சட்­ட­மன்­றத் தேர்­தலைக் குலைக்க இத்­த­கைய சம்­ப­வங்­கள் நடை­பெற்று வரு­கிறது என்றார் அவர். மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெறு­வோ­ரைப் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

"பஞ்­சாப் எல்­லை­யோர மாநி­லம். எனவே பஞ்­சாப் நிலை­யாக இருப்­பதை சில சக்­தி­கள் விரும்புவதில்லை. விசா­ரணை நடை­பெ­ற்று வரு­கிறது. வெளி சக்­தி­க­ளின் சாத்­தி­யக்­கூறு உட்­பட பின்­னணி எதை­யும் நிரா­க­ரிக்க முடி­யாது. மாநி­லம் முழு­வ­தும் உச்ச விழிப்புநிலையில் உள்ளது," என்­றார் துணை முதல்­வர் சுக்­ஜிந்­தர் சிங் ரந்­தாவா.

சம்­ப­வம் குறித்து உள்­துறை அமைச்சு பஞ்­சாப் மாநி­லத்­தி­டம் அறிக்கை கேட்­டுள்­ளது.