பங்ளாதேஷ் பயணிகள் படகில் தீ; 32 பேர் மரணம்

பங்ளாதேஷ் பயணிகள் படகில் தீ; 32 பேர் மரணம்

1 mins read

பங்ளாதேஷில் பயணிகள் படகு ஒன்று தீப்பற்றிக் கொண்டதில், குறைந்தது 32 பேர் மாண்டுவிட்டனர்.

மூன்று அடுக்குகள் கொண்ட ஓபிஜான் 10 எனும் படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்துக் கொண்டது.

பங்ளாதேஷ் போலிசார் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) அன்று இதைத் தெரிவித்தனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து 250 கிலோமீட்டர் தெற்கில் இருக்கும் ஜக்கார்காதி எனும் ஊரின் அருகே, அதிகாலையில் சம்பவம் நிகழ்ந்தது.

பலர் தீயில் கருகி மாண்டதாகவும் மேலும் சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து மூழ்கியதாகவும் கூறப்பட்டது.

மாண்டோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று அந்த வட்டாரத்தின் போலிஸ் தலைவர் மொய்னுல் இஸ்லாம் தெரிவித்தார்.