கூடுதல் நோயாளி கண்காணிப்பு வசதிகள்

கூடுதல் நோயாளி கண்காணிப்பு வசதிகள்

2 mins read

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோ­ரைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக, தேவை ஏற்­பட்­டால் கூடு­தல் நோயாளி கண்­கா­ணிப்பு வச­தி­கள் அமைக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை திடீ­ரென உய­ரும் சாத்­தி­யம் இருப்­ப­தால் அதை எதிர்­கொள்­ளத் தயா­ரா­கும் வகை­யில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி 14 நோயாளி கண்­கா­ணிப்பு வச­தி­கள் இருப்­ப­தா­கத் தெரி­வித்த சுகா­தார அமைச்சு, தேவை ஏற்­பட்­டால் அடுத்த ஒரு மாதத்­தில் கூடு­த­லாக 12 நோயா­ளி­ கண்­கா­ணிப்பு வச­தி­கள் அமைக்­கப்­படும் எனக் கூறி­யது.

இந்த நிலை­யங்­களில் 11,000 பேர் வரை தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் அமைச்­சின் செய்­தித் ­தொ­டர்­பா­ளர் நேற்று கூறி­னார்.

எதிர்­பா­ராத சூழல்­கள் ஏற்­பட்­டால் அதற்கு ஏற்ப, தேவை­யான திட்­டங்­கள் தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மிக வேக­மாக, எளி­தா­கப்

பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் கிரு­மித் தொற்று ஏற்­ப­டா­மல் தடுக்க

பல்­வேறு பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் எடுத்­துள்­ளது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கு­வது, கொவிட்-19 தடுப்­பூசி, பூஸ்­டர் தடுப்­பூசி போடும் திட்­டத்தை மேலும் பல வய­தி­ன­ருக்கு நீட்­டிப்­பது, தேவை ஏற்­பட்­டால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­களை அதி­க­ரிப்­பது போன்ற நட­

வ­டிக்­கை­கள் அவற்­றில் அடங்­கும்.

கடந்த திங்­கட்­கி­ழமை நில­

வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் 71 பேருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

அவர்­களில் 65 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள். ஆறு பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்

பட்­டுள்­ளது.

ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் தொற்­று­நோய்­

க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று சுகா­தார அமைச்சு இதற்கு முன்பு கூறி­யி­ருந்­தது.

ஆனால் அவர்­களில் சிலர் தற்­போது சிகிச்சை பெறு­வ­தற்­காக ஒயே­சியா ஹோட்­டல் நொவீ­னா­வுக்கு அனுப்­பப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் தெரி­வித்­தது. கடந்த அக்­டோ­பர் மாதத்­தில் அந்த ஹோட்­டல் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான சமூக சிகிச்சை நிலை­ய­மாக அறி­விக்­கப்­பட்­டது.

அந்த ஹோட்­டல் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசி­ய­ நி­லை­யம் அரு­கில் அமைந்­துள்­ளது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வோ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று முன் இல்­லாத அள­வில் 89 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருந்­தது.

இதன் கார­ண­மாக பிரிட்­ட­னி­லி­ருந்து வரும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­களில் பணி

­பு­ரி­யும் விமா­னச் சிப்­பந்­தி­கள் முகக்­க­வ­சங்­கள், கண்­க­ளைப் பாது­காக்­கும் கண்­ணா­டி­கள் ஆகி­ய­வற்­று­டன் முழுப் பாது­காப்பு ஆடை­க­ளை­யும் கட்­டா­ய­மாக அணிந்­தி­ருக்க வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பிரிட்­ட­னி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த பய­ணி­க­ளுக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று இருப்­பது கண்டு பிடிக்­கப்­பட்­ட­தால் இந்­தப் புதிய பாது­காப்பு நட­வ­டிக்கை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை­யி­லான அனைத்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­ருக்­கான பயணத் தட திட்டப் பய­ணச்­சீட்டு விற்­ப­னையை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கு­மாறு சுகா­தார அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.