'நீர் வழி பரவும் நோய்களை தடுக்க மலேசியா தயார்'

'நீர் வழி பரவும் நோய்களை தடுக்க மலேசியா தயார்'

1 mins read

மலே­சி­யா­வில் பல மாநிலங்கள் வெள்­ளத்தால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்­றைய நில­வ­ரப்­படி

வெள்­ளம் கார­ண­மாக சிலாங்­கூர், பாகாங், கிளந்­தான் ஆகிய

மாநி­லங்­களில் 41 பேர் மாண்­டு­

விட்­ட­னர்.

மாண்­ட­வர்­களில் 26 ஆட­வர்­களும் 13 பெண்­களும் இரு சிறு­வர்­களும் அடங்­கு­வர் என்று

மலே­சி­யக் காவல் துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, வெள்­ளம் கார­ண­மாக நீர் வழி பர­வக்­கூ­டிய நோய்­க­ளால் பலர் பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்ற அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது. அத்­த­கைய நோய்ப் பர­வல் ஏற்­பட்­டால் அதை எதிர்­கொள்­ளத் தமது அமைச்சு தயா­ராக இருப்­ப­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நேற்று உறுதி அளித்­தார்.

இது­வரை நீர் வழி பர­வும் நோயால் யாருக்­கும் கடு­மை­யான பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்­றார் அவர். இரண்டு வயது சிறு­வ­னுக்கு மட்­டும் வாந்தி, வயிற்­றுப்­போக்கு ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார். நிலை­மை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க தேவை­யான நட­

வ­டிக்­கை­களைத் தமது அமைச்சு எடுத்­தி­ருப்­ப­தாக திரு கைரி தெரி­வித்­தார். பெரும்­பா­லான துயர் துடைப்பு நிலை­யங்­க­ளுக்கு

மருத்­துவ அதி­கா­ரி­கள் அனுப்­பப்­

பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார் அமைச்­சர் கைரி.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பள்ளித் தவணை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார்.