ஈடு இணையற்ற கிறிஸ்மஸ் பரிசு

ஈடு இணையற்ற கிறிஸ்மஸ் பரிசு

1 mins read
c0027d75-4512-44dd-a998-f431511ad3db
-

நீல் ஜேசன்-ரேச்­சல் சாமு­வேல் தம்­ப­திக்கு இவ்­வாண்டு கிறிஸ்­மஸ் தினக் கொண்­டாட்­டம் வாழ்­வில் மறக்க முடி­யாத ஒன்­றாக அமைந்­துள்­ளது.

திரு­ம­ணப் பந்­தத்­தில் இணைந்து மூன்று ஆண்­டு­க­ளா­கி­யும்

குழந்­தை­யில்­லாத கார­ணத்­தால் 'ஐவி­எஃப்' எனப்­படும் செயற்கை முறை­யில் கருத்­த­ரிக்­கும்

முயற்­சிக்­குத் திரு­மதி ரேச்­சல்

தயா­ரா­னார்.

ஆனால் அந்த சிகிச்­சை­யைத் தொடங்குவ­தற்கு முன்பே இவ்­வாண்டு ஜன­வரி மாதம் அவர்

களுக்கு எதிர்­பாரா நற்­செய்தி கிடைத்­தது. திரு­மதி ரேச்­சல் கர்ப்­ப­மா­னார்.

இருப்­பி­னும், வெறும் 29 வாரங்

களி­லேயே குழந்­தை­யைப் பெற்

றெடுக்­கும் நிலை ஏற்­பட்­டது.

இத­னால் குழந்­தைக்கு மருத்­து ­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

குழந்தை பெத்­தனி பிறந்து மூன்று வாரங்­கள் ஆன பிறகே திரு­மதி ரேச்­ச­லால் தமது மகளைத் தழு­விக்­கொள்ள முடிந்­தது.

இன்று குழந்தை பெத்­தனி பிறந்து ஐந்து மாதங்­க­ளா­கி­

விட்­டன.

பல சோத­னை­க­ளை­யும் சவால்­

க­ளை­யும் கடந்து வந்­துள்ள நீல்-ரேச்­சல் தம்­ப­தி­யர் இன்று தங்­கள் எழில்­மிக்க பெண் குழந்­தை­யு­டன் கிறிஸ்­மஸ் பண்­டி­கையை அள­வில்லா மகிழ்ச்­சி­யு­டன்

கொண்­டாடுகின்­ற­னர்.