'ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர், வீட்டில் குணமடையும் நடைமுறை காலப்போக்கில் அறிமுகம் செய்யப்படும்'

'ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர், வீட்டில் குணமடையும் நடைமுறை காலப்போக்கில் அறிமுகம் செய்யப்படும்'

1 mins read
687269ea-7527-494e-bdca-3177d6088ae9
-

ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர், வீட்டில் குணமடைவதும் தங்களை சுயமாக பரிசோதனை செய்துகொள்வதும் காலப்போக்கில் பொதுச் சுகாதார நடைமுறையின் ஒரு பகுதியாக அமையும் என்று சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய நடைமுறைகள் தற்காலிகமானவை என்பதையும் அமைச்சு தெளிவுபடுத்தியது.

ஓமிக்ரான் திரிபைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் சிங்கப்பூர் அதன் பதில் நடவடிக்கைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும் தற்போதைய நடைமுறை காலஅவகாசம் வழங்குவதாக அமைச்சு கூறியது.

"சொல்லப்போனால், இது (ஓமிக்ரான்) வேகமாகப் பரவக்கூடிய திரிபு என்பது கடந்த சில வாரங்களாக தெளிவாகி உள்ளது. மேலும், தொற்றுக்கு ஆளானோரிடையே கடுமையான நோய்ப் பாதிப்பை இது ஏற்படுத்தும் சாத்தியம் குறைவு என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன," என்று அமைச்சு கூறியது.

"(ஓமிக்ரான் குறித்து) கூடுதல் தெளிவு கிடைத்தவுடன், ஓமிக்ரானுக்கும் மற்ற கொவிட்-19 திரிபுகளுக்கும் இடையிலான பொதுச் சுகாதார நடைமுறைகளைக் காலப்போக்கில் நாங்கள் ஒன்றுசேர்ப்போம்.

"வீட்டில் குணமடைவது, தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக சுயபரிசோதனை முறையை அமல்படுத்துவது உள்ளிட்டவை இத்தகைய நடைமுறைகளில் அடங்கும். கொவிட்-19 நோயுடன் வாழ்வதற்கு இவையெல்லாம் முக்கியமான நடவடிக்கைகள்," என்று அமைச்சு விவரித்தது.