ஓமிக்ரான் தொற்றுக்கும் காலப்போக்கில் சுயபரிசோதனை, வீட்டில் குணமடைதல்

ஓமிக்ரான் தொற்றுக்கும் காலப்போக்கில் சுயபரிசோதனை, வீட்டில் குணமடைதல்

2 mins read

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர், வீட்­டில் குண­ம­டை­வ­தும் தங்­க­ளைச் சுய­மாக பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தும் காலப்­போக்­கில் பொதுச் சுகா­தார நடை­மு­றை­யின் ஓர் அங்­க­மாக இடம்­பெ­றும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

ஓமிக்­ரான் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான தற்­போ­தைய நடை­மு­றை­கள் தற்­கா­லி­க­மா­னவை என்­ப­தை­யும் அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது.

ஓமிக்­ரான் திரி­பைப் பற்றி மேலும் தெரிந்து­கொள்­ள­வும் சிங்­கப்­பூர் அதன் பதில் நட­வ­டிக்­கை­களை சூழ்­நி­லைக்கு ஏற்­ற­வாறு மாற்றி அமைத்­துக்­கொள்­ள­வும் தற்­போ­தைய நடை­முறை, கால­அ­வ­கா­சம் வழங்­கு­வ­தாக அமைச்சு கூறி­யது.

"இன்­னும் சொல்­லப்­போ­னால், இது (ஓமிக்­ரான்) வேக­மா­கப் பர­வக்­கூ­டிய திரிபு என்­பது கடந்த சில வாரங்­க­ளாக தெளி­வாகி வரு­கிறது. மேலும், தொற்­றுக்கு ஆளா­னோ­ரி­டையே கடு­மை­யான நோய்ப் பாதிப்பை இது ஏற்­ப­டுத்­தும் சாத்­தி­யம் குறைவு என்­ப­தற்­கான அறி­கு­றி­களும் தென்­ப­டு­கின்­றன," என்றது அமைச்சு.

"ஓமிக்­ரான் குறித்து கூடு­தல் தெளிவு கிடைத்­த­வு­டன் ஓமிக்­ரா­னுக்­கும் மற்ற கொவிட்-19 திரி­பு­க­ளுக்­கும் இடை­யி­லான பொதுச் சுகா­தார நடை­மு­றை­க­ளைக் காலப்­போக்­கில் நாங்­கள் ஒன்­று­சேர்ப்­போம்.

"தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக சுய­ப­ரி­சோ­தனை முறையை அமல்­ப­டுத்­து­வது மற்­றும் வீட்­டில் குண­ம­டை­வது உள்­ளிட்­டவை இத்­த­கைய நடை­மு­றை­களில் அடங்­கும். கொவிட்-19 நோயு­டன் வாழ்­வ­தற்கு இவை­யெல்­லாம் முக்­கி­ய­மான நட­வடிக்­கை­கள்," என்று அமைச்சு விவ­ரித்­தது. 'ஓமிக்­ரான் குழப்­பத்­துக்கு ஆளான சிங்­கப்­பூர் சுற்­றுப்­ப­ய­ணி­கள்' என்ற தலைப்­பில் 'புளூம்­பெர்க்' செய்தி நிறு­வ­னம் இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று வெளி­யிட்ட கட்­டு­ரைக்கு அமைச்சு அளித்த பதி­லில் இது இடம்­பெற்­றி­ருந்­தது. வெவ்­வேறு நிபந்­தனை­க­ளுக்கு உட்­பட்ட மூன்று வெளி­நாட்­ட­வ­ரின் சிங்­கப்­பூர் பயண அனு­ப­வங்­களை அந்­தக் கட்­டுரை குறிப்­பிட்­டி­ருந்­தது.

டிசம்பர் 25 நிலவரப்படி

புதிய கொவிட்-19 சம்பவங்கள்-248

ஓமிக்ரான் கிருமியால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்-98

ஓமிக்ரான் கிருமியால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்-448

ரிவர் வேலி ரோட்டின் 'வினில் பார்' தொடர்பில் 10 பேர் அடங்கிய ஓமிக்ரான் கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று உருவாகியுள்ளது.