உலகை வென்ற விளையாட்டு வீரர்களின் கொண்டாட்ட நகர்வலம்

உலகை வென்ற விளையாட்டு வீரர்களின் கொண்டாட்ட நகர்வலம்

1 mins read
cddb2e7e-5381-4914-8bf6-a83b8523485e
-

அனைத்­து­லக அள­வில் நாட்­டுக்­குப் பெருமை தேடித் தந்த உள்­ளூர் விளை­யாட்டு வீரர்­கள் (இட­மி­ருந்து) லோ கியன் இயூ (பேட்­மிண்­டன்), யிப் பின் சியூ (உடற்­குறை உள்­ளோ­ருக்­கான நீச்­சல்), ஷேனா இங் (உருட்­டுப்­பந்து), அலொய்­ஷஸ் யாப் (கியூஸ்­போர்ட்ஸ்) ஆகி­யோர் நேற்று சிறப்­புப் பேருந்­தின் மேல் தளத்­தில் அமர்ந்து நகர்­வ­லம் வந்து பொது­மக்­க­ளைச் சந்­தித்து தங்­கள் வெற்­றி­யைக் கொண்­டா­டி­னர்.

சிங்­கப்­பூ­ரர்­களும் இணைந்து இவர்­களது வெற்­றி­யைக் கொண்­டாட வேண்­டும் என்ற நோக்­கில் பேருந்­தில் நான்கு விளை­யாட்டு வீரர்­களும் வலம்­வர ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இரண்டு மணி நேரத்­தில் ஸ்போர்ட்ஸ் ஹப் வளா­கத்­தில் தொடங்கி நகர்ப் பகுதி வழி­யா­கச் சென்று மீண்­டும் அதே வழி­யில் திரும்­பி­னர் வீரர்­கள்.

படம்: சாவ்­பாவ்