சிங்கப்பூரில் 52,000 ஊழியர்கள் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

சிங்கப்பூரில் 52,000 ஊழியர்கள் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

1 mins read
15fd257a-d3e5-4979-8f43-b5120bdbd69c
டிசம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, 80 விழுக்காடு நிறுவனங்களில் ஊழியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் ஏறக்குறைய 52,000 ஊழியர்கள் கொவிட்-19க்கு எதிராக இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 27) தெரிவித்துள்ளது.

அவர்களில் ஏறத்தாழ 6,700 பேர், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். அவர்களை கொவிட்-19 தொற்றினால் கடுமையான நோய்ப் பாதிப்பு அல்லது மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக அமைச்சு கூறியது.

இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களில் சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியாக தகுதிபெறவில்லை என்பதை அமைச்சு சுட்டியது.

இந்நிலையில், சுயதொழில் செய்வோரைத் தவிர்த்து, ஊழியரணியில் 98 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, 80 விழுக்காடு நிறுவனங்களில் ஊழியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்.

இது ஒரு முன்னேற்றத்தக்க நிலை என்று மனிதவள அமைச்சு சொன்னது. காரணம், டிசம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி, 75,000 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.