கறுப்புப்பணம்: எண்ண முடியாமல் கை அசந்த அதிகாரிகள் இயந்திரங்களை வரவழைத்தனர்

இந்­தி­யா­வின் உத்­தி­ரப்­பி­ர­தேச மாநிலம் கான்­பூரைச் சேர்ந்த வாசனைத் திர­விய தொழி­ல­தி­பர் வீட்­டில், இந்­திய மறை­முக வரி, சுங்க வாரி­யம் நடத்­திய சோதனை யில் கோடி கோடி­யாகப் பணம், நகை, பத்­தி­ரங்­கள் சிக்­கின.

அதி­கா­ரி­க­ளால் பணத்தை எண்ண முடி­யா­மல் அசந்துவிட்­ட­தால் வங்­கி­களில் இருந்து பணம் எண்­ணும் இயந்­தி­ரங்­கள் வர­வ­ழைக்­கப்­பட்­டும் மொத்த பணத்தை இன்­ன­மும் எண்ணி முடிக்­க­வில்லை என்று நேற்று அந்த அதி­கா­ரி­கள் கூறி­ய­தாக என்­டி­டிவி செய்தி நிறு­வனம் தெரி­வித்­தது.

பியூஷ் ஜெயின் என்ற அந்த தொழி­ல­தி­ப­ருக்­குச் சொந்­த­மான பல இடங்­களில் மொத்­தம் 107 கோடி ரூபாய் ரொக்­க­மும் சுமார் 180 கோடி ரூபாய் மதிப்­புள்ள தங்­கம், வெள்ளி, சொத்துப் பத்­தி­ரங்­களும் இது­வ­ரை­யில் கைபற்­றப்­பட்டு இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

குடும்ப நகை­களை விற்று அதன்­ மூ­லம் கிடைத்த பணத்­தைச் சேர்த்து வைத்­த­தாக அதி­கா­ரி­களி­டம் பியூஷ் ஜெயின் கூறியதா­க­வும் ஆனால் அதற்­கான ஆதா­ரங்களைக் கொடுக்க அவ­ரால் முடி­ய­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பியூஷ் ஜெயி­னுக்குச் சொந்­த­மான மூதா­தை­யர் வீட்­டில் 18 ரகசியப் பெட்­ட­கங்­கள் இருந்­தன.

அவற்­றைத் திறக்க 500 சாவி­களைக் கொண்ட சாவிக்­கொத்­தும் இருந்­த­தாகத் தக­வல்­கள் கூறின.

அதி­கா­ரி­க­ளின் சோத­னை­யும் அவ­ரி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களை வகைப்­படுத்தும் பணி ­களும் தொடர்ந்து நடந்து வரு­வதாக அதி­கா­ரி­களை மேற்­கோள்­காட்டி நேற்று என்­டி­டிவி கூறி­யது.

தொழி­ல­தி­ப­ருக்­குச் சொந்­த­மான பல இடங்­க­ளி­லும் இரவு, பக­லாக 120 மணி நேரம் சோதனை நடந்­த­தா­க­வும் 16 சொத்­துக்­களும் அவற்றின் ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் மேலும் கூறினர். அந்­தச் சொத்­து­கள் கான்­பூர், கனோஜ், மும்பை, புது­டெல்லி நகர்­களில் உள்­ளன.

பியூஷ் ஜெயின் 40க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களை நடத்தி வரு­வ­தா­க­வும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!