கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதை மேலும் வசதியாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பயணிகளும் முன்
களப் பணியாளர்களும் 90க்கும் மேற்பட்ட இடங்களில், பயிற்சிபெற்ற ஊழியர்களின் மேற்பார்வையின்கீழ் 'ஏஆர்டி' சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
இந்த விரைவுப் பரிசோதனை நிலையங்களில் பல்மருந்தகங்களும் மரினா பே சேண்ட்ஸ் கடைத்
தொகுதியும் அடங்கும்.
தீவு முழுவதும் 10 மருந்தகங்களில் இதற்காகத் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக 'கியூ அண்ட் எம்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'அக்யுமென் டயக்னாஸ்டிக்ஸ்', ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது.
ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் நான்கு பேருக்கு மட்டுமே கொவிட்-19 பரிசோதனை செய்யப்படும் என்றும் அதனால் மருந்தகத்தைச் சுத்தம் செய்ய ஊழியர்களுக்குப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஓங் சியூ ஹுவா தெரிவித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளுக்கு அருகிலும் பிரபல கடைத்தொகுதி
களிலும் இந்தப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்கும் 'டாக்டர் எனிவேர்' நிறுவனம், அதன் எட்டு மருந்தகங்களில் கொவிட்-19 பரிசோதனைச் சேவையை வழங்குகிறது.
அவற்றில் 24 மணி நேர மருந்தகம் ஒன்றும் அடங்கும்.
'கேப்பிட்டலேண்ட்' நிறுவனம், அதன் ஆறு கடைத்தொகுதிகளில் விரைவுப் பரிசோதனை நிலையங்களை அமைக்க சுகாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.
விரைவுப் பரிசோதனை நிலையத்துக்குச் செல்வோர் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தங்களுடைய அடையாளத்தைச் சரிபார்த்துக்கொள்ள, தங்களுடைய பெயர், புகைப்படம் அடங்கிய ஆவணத்தை அவர்கள் உடன் கொண்டு செல்ல
வேண்டும். பரிசோதனைக்கான
கட்டணம் $15.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டம் (விடிஎல்) மூலம்
சிங்கப்பூருக்கு வரும் பயணி
கள் அனைவரும் 'ஏஆர்டி' சுய பரிசோதனை செய்து, முடிவுகளை நேரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு நினைவூட்டியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறும் பயணிகளுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்
படுவதுடன், தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் அமலாக்க நட
வடிக்கைகளை அவர்கள் எதிர்நோக்குவர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளுக்கு வெளியிலும் கொவிட்-19
விரைவுப் பரிசோதனை நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத் தலங்களிலும் கூடுதல் விரைவுப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 20ஆம் தேதியன்று ஹேவ்லாக் வட்டாரத்தில் உள்ள காப்தார்ன் கிங்ஸ் ஹோட்டலில் விரைவுப் பரிசோதனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.
ஆன்சன் சாலையில் உள்ள எம் ஹோட்டல் சிங்கப்பூரில் மற்றொரு நிலையம் அடுத்த மாதம் முதல் வாரம் திறக்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விரைவுப் பரிசோதனை மையங்களுக்கான முழுப் பட்டியலை https://www.moh.gov.sg/covid-19/quick-test-centres-(qtcs) எனும் இணையப்பக்கத்தில் காணலாம்.

