கொவிட்-19: டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள்

கொவிட்-19: டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள்

2 mins read

இந்­தி­யா­வில் 21 மாநி­லங்­க­ளுக்கு ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை பர­வி­யுள்ள நிலை­யில், தலை­ந­கர் புது­டெல்­லி­யில் மஞ்­சள்

எச்­ச­ரிக்கை அமல்­ப­டுத்­தப்

பட்­டுள்­ளது.

இந்­தப் கட்­டுப்­பா­டு­கள் இன்று முதல் நடப்­புக்கு வரு­கின்­றன. இதை­ய­டுத்து, பள்­ளி­கள், கல்­லூ­ரி ­கள், திரை­ய­ரங்­கு­கள், அழகு நிலை­யங்­கள், உடற்­ப­யிற்சி கூடங்­கள் ஆகி­ய­வற்றை உட­ன­டி­யாக மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. மெட்ரோ ரயில்­கள், பேருந்­து­கள் உண­வ­கங்­களில் 50% இருக்­கை­களை

மட்­டுமே பயன்­ப­டுத்­த­லாம். இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊர­டங்கு அம­லில் இருக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு கடந்த சில நாள்­க­ளாகத் தொற்று உறு­தி­யா­கும் விகி­தம் 0.5 விழுக்­கா­டாக உள்­ள­தால், முதல்­கட்­ட­மாக மஞ்­சள் எச்­ச­ரிக்கை அமல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

விரை­வில் கட்­டுப்­பா­டு­கள் குறித்த அறிக்கை வெளி­யி­டப்­படும் என்று அம்­மா­நில முதல்­வர்

அர­விந்த் கெஜ்­ரி­வால் நேற்­று

தெரி­வித்­தார். நேற்று முன்­தி­னம் மட்­டும் அங்கு 331 பேருக்குப் புதி­தா­கத் தொற்று உறுதி செய்­யப்­

பட்­டது. இதுவே கடந்த ஆறு மாதங்­களில் அங்கு பதி­வா­கி­யுள்ள ஆக அதி­க­மான ஒரு­நாள் பாதிப்பு.

டெல்லி, மக­ராஷ்­டிரா மாநி­லங்­களில் ஓமிக்­ரான் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது.

இந்­தி­யா­வில் பதி­வான 6,354 புதிய தொற்­று­ சம்பவங்களில் 653 ஓமிக்­ரான் தொற்­று சம்பவங்களாக உள்­ளன.

கிரு­மி பாதிப்­பைக் குறைக்க தடுப்­பூசி இயக்­கத்தை இந்­தியா மேலும் முடுக்­கி­விட்­டுள்­ளது.

இதன் ஒரு பகு­தி­யாக இரண்டு தடுப்­பூ­சி­க­ளுக்­கும் ஒரு நோய்­எதிர்ப்பு மாத்­தி­ரைக்­கும் அவ­ச­ரக்­கா­லப் பயன்­பாட்­டுக்கு இந்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு நேற்று அனு­மதி அளித்­துள்­ளது.

"கொரோ­னா­வுக்கு எதி­ரான போரைத் தீவி­ரப்­ப­டுத்­தும் வகை­யில், இந்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு ஒரே நாளில் மூன்று மருந்­து­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளது," என்று சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள சீரம் நிறு­வ­னத்­தின் கோவோ­வேக்ஸ் தடுப்­பூ­சி­யை­யும் ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த பயோ­லா­ஜிக்­கல்-இ நிறு­வ­னத்­தின் கார்­பி­வேக்ஸ் தடுப்­பூ­சி­யை­யும் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம். இவற்றை சில கட்­டுப்­பா­டு­க­ளு­டன் பயன்­ப­டுத்­த­லாம் எனக் கூறப்­

பட்­டுள்­ளது. இவற்­றுக்­கான இறுதி ஒப்­பு­தலை இந்­திய மருந்­துக்

கட்­டுப்­பாட்டு அமைப்பு விரை­வில் வழங்­கும் எனத் தெரி­கிறது.

அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள 'மால்­னு­பி­ரா­விர்' எனும் கிருமி எதிர்ப்பு மாத்­தி­ரைக்கு 10 நிறு

­வ­னங்­கள் இது­வரை மருந்­த­க­நிலை பரி­சோ­த­னையை முடித்­துள்­ளன. இது கிரு­மி பாதிப்பை 30% குறைப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் தற்­போது கோவேக்­சின், கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­தான் மக்­க­ளுக்­குப் பர­வ­லா­கச் செலுத்­தப்­பட்டு வரு­கின்றன. ஸ்புட்­னிக் தடுப்­பூசி புழக்­கத்­தில் இருந்­தா­லும் மிகக் குறை­வா­கவே செலுத்­தப்­

ப­டு­கிறது. 15 வய­துக்கும் மேற்பட்ட சிறாருக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் தடுப்­பூ­சி­யும் முன்­

க­ளப் பணி­யா­ளா்­க­ள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் பூஸ்­டர் தடுப்பூசியும் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் கொவிட்-19 தடுப்­பூ­சியைப் போட்டுக்கொள்ள அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்து கொள்­ள­லாம் என்­றும் அவா்க­ளுக்கு கோவேக்­சின் தடுப்­பூசி மட்­டுமே செலுத்­தப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.