அலைகடலில் அல்லாடும் ரோஹிங்யா அகதிகள்

1 mins read
0a74e970-1708-4af0-919f-1208c54048fb
-

உதவி அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்தோனீசியா தனது கடல்பகுதியில் தவித்து நிற்கும் ரோஹிங்யா அகதிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. எனினும், அனைத்துலகக் கோரிக்கைகளை நிராகரித்த இந்தோனீசியா, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்துவிட்டது. சுமாத்ரா தீவின் மேற்கு மாநிலமான அச்சே கடல்பகுதி யில் பெண்கள், குழந்தைகள் உட்பட 120 பேர் அடைந்து கிடக்கும் இந்தப் படகு சிக்கித் தவிக்கிறது. படகில் உள்ள அகதிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் வழங்கப்படும் என்று அச்சே மாநில அதிகாரிகள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்