முதன்முறையாக சிங்கப்பூரில் பிறந்துள்ள பாண்டா குட்டிக்கு 'லெ லெ' எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சிங்கப்பூரைக் குறிக்கும் சீன வார்த்தையைக் கொண்டு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த பாண்டா குட்டி நேற்று முதன்முறையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது, ரிவர் வொண்டர்ஸில் உள்ள 'ஜயன்ட் பாண்டா ஃபாரஸ்ட்' காப்பகத்தில். சிங்கப்பூருக்கான சீனத் தூதர் ஹோங் சியாவ்யோங், 'மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ்' குழுமத்தின் துணைத் தலைவர் டான் சுவான் ஜின் ஆகியோர் நேரில் சென்று 'லெ லெ'வைக் கண்டு மகிழ்ந்தனர். பிறந்தபோது 200 கிராம் ஆக இருந்த இதன் இப்போதைய எடை 9.62 கிலோகிராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூரில் பிறந்த பாண்டா குட்டி பொதுமக்களின் பார்வைக்கு
1 mins read

