37 வயது ஆடவர் மரணம்: வெளிநாட்டு ஊழியர் மீது குற்றச்சாட்டு

37 வயது ஆடவர் மரணம்: வெளிநாட்டு ஊழியர் மீது குற்றச்சாட்டு

2 mins read

வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர், ஜனவரி 1ஆம் தேதி புத்­தாண்டு தினத்­தன்று ஆணி­களுடன் கூடிய ஒரு மரப்பலகையால் ஆட­வர் ஒருவரை உயிர்­போ­கும்­படி தாக்­கி­விட்­டார் என்று அந்த ஊழி­யர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வ­ரான பன்­னீர் வெற்­றி­வேல், 26, என்ற அந்த ஊழி­யர் மீது, ஆபத்­தான ஆயு­தத்­தின் மூலம் வேண்­டு­மென்றே கடு­மை­யான காயங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­தாக குற்­ற­வியல் நீதிமன்ற சிறப்பு அமர்­வின்­போது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

புத்­தாண்டு அன்று அதி­காலை சுமார் 1 மணிக்­கும் 1.25 மணிக்கும் இடை­யில், எண் 20, உட்­லண்ட்ஸ் தொழிற்­பேட்டை இ1 அருகே அந்தப் பலகையால், திரு ராஜேந்­தி­ரன் சண்­மு­க­சுந்­த­ரன், 37, என்­ப­வரை பன்­னீர் வெற்­றி­வேல் தாக்கி இருக்­கிறார் என்று கூறப்­ப­டு­கிறது.

உட்­லண்ட்ஸ் தொழிற்­பேட்­டை­யில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் அந்த இரு­வ­ரும் சச்­ச­ரவில் ஈடு­பட்­ட­தாக சனிக்­கிழமை காவல்­துறை தெரி­வித்­தது.

இரு­வ­ருக்­கும் இடை­யி­லான கைக­லப்பு பற்றி ஜன­வரி 1ஆம் தேதி அதி­காலை சுமார் 1.25 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்­தது. அதை அடுத்து சம்­பவம் நிகழ்ந்த இடத்­துக்கு அதி­கா­ரி­கள் விரைந்தனர்.

அங்கு திரு ராஜேந்­தி­ரன் தலையில் காயத்­து­டன் அசைவின்றி தரை­யில் கிடந்­த­தை அதிகாரிகள் கண்­ட­னர்.

திரு ராஜேந்­தி­ரன் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். பிறகு அவர் மாண்­டு­விட்­டார்.

பன்­னீர் கைதாகி மேல் புலன்­வி­சா­ர­ணைக்­காக விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்டு இருக்கிறார்.

இந்த வழக்கு ஜன­வரி 7ஆம் தேதி மீண்­டும் நீதி­மன்­றத்­துக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வேண்­டு­மென்றே கடு­மை­யான காயங்­களை விளை­வித்­த­தா­கக் கூறும் குற்­றச்­சாட்­டின் பேரில் யாரா­வது குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஆயுள்­தண்­டனை மற்­றும் பிரம்­படி அல்­லது 15 ஆண்டு வரை சிறைத்­தண்­டனை, பிரம்­படி மற்­றும் அப­ரா­தம் விதிக்க சட்­டத்­தில் இடம் இருக்­கிறது.