சிகிச்சை தர மறுப்பு; சிசுவை இழந்த தாய்

சிகிச்சை தர மறுப்பு; சிசுவை இழந்த தாய்

1 mins read

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைக் கார­ணம் காட்டி மருத்­துவ உதவி நாடி வந்த எட்டு மாதக் கர்ப்­பிணியை சீனா­வின் சியான் நக­ரில் உள்ள காவ்­சின் மருத்­து­வ­மனை அனு­ம­திக்க மறுத்­து­விட்­டது. இதன் விளை­வாக அப்­பெண்­ணுக்­குத் தேவை­யான மருத்­துவ உதவி கிடைக்­கா­மல் வயிற்­றில் இருந்த குழந்தை மாண்­டது. புத்­தாண்டு தினத்­தன்று இந்­தச் சோகச் சம்பவம் நிகழ்ந்­தது.

அந்­தக் கர்ப்­பி­ணி­யின் கொவிட்-19 பரி­சோ­தனை சான்­றி­தழ் காலா­வ­தி­யாகி நான்கு மணி நேரம் மட்­டுமே ஆகி­யி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ­ருக்கு அவ­சர சிகிச்சை தேவை என்று தெளி­வா­கத் தெரிந்­தும் மருத்­து­வ­மனை நீக்­குப்­போக்­கு­டன் நடந்­து­கொள்­ள­வில்லை என்று அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன.

ரத்­தக் கசிவு ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு வெளியே உள்ள நடை­பா­தை­யில் அந்­தக் கர்ப்­பிணி பரித­வித்­த­தைக் காட்­டும் காணொளி இணை­யத்­தில் வலம் வந்­தது.

இதை­ய­டுத்து, காவ்­சின்

மருத்­து­வ­ம­னை­யின் இரண்டு உயர் அதி­கா­ரி­க­ளைச் சீன அர­சாங்­கம் பதவி நீக்­கம் செய்­துள்­ளது.

மருத்­து­வ­ம­னை­யின் தலைமை மேலா­ளர் இடை­நீக்­கம் செய்­யப்­

பட்­டுள்­ள­தாக சியான் மாநில அர­சாங்­கம் நேற்று அறிக்கை வெளி­யிட்­டது. அந்­ந­க­ரத்­தின் சுகா­தார ஆணை­யத் தலை­வ­ருக்­கும் சீனா­வின் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­ட­மி­ருந்து எச்­ச­ரிக்­கைக் கடி­தம் அனுப்­பப்­

பட்­டுள்­ளது.

இந்­தத் துய­ரச் சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. மருத்­து­வ­ம­னை­யின் கவ­னக்­கு­றைவு கார­ண­மாக விபத்து நிகழ்ந்­தி­ருப்­ப­தாக விசா­ர­ணைக் குழு தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பாதிக்­கப்­பட்ட பெண்­ணி­டம் மன்­னிப்பு கேட்டு அவ­ருக்கு இழப்­பீடு வழங்­கும்­படி மருத்­து­வ­ம­னைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.