தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதனுக்குப் பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை

1 mins read
8449c28b-76b8-417b-88b2-33f454b1cbde
பன்றி இதயம் பொருத்தப் பட்ட 57 வயது டேவிட் பென்னட்டுடன் (வலது) மருத்துவர் பார்ட்லி கிரிஃபித். (இடப்படம்) அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் குழு. படங்கள்: இபிஏ -
multi-img1 of 2

முதன்­மு­றை­யாக, மர­பணு மாற்­றம் செய்­யப்­பட்ட பன்­றி­யின் இத­யத்தை மனி­தனுக்­குப் பொருத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சை­யில் மருத்­துவ உல­கம் மாபெ­ரும் சாதனை படைத்­துள்­ளது.

உயி­ருக்கு அச்­சு­றுத்­த­லான இதய நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த, அமெ­ரிக்­கா­வின் மேரி­லாண்­டைச் சேர்ந்த 57 வய­தான டேவிட் பென்­னட் சீனி­யருக்­குப் பன்­றி­யின் இத­யம் பொருத்­தப்­பட்­டது. பால்­டி­மோ­ரில் நடந்த இந்த எட்டு மணி நேர அறுவை சிகிச்­சையை மேரி­லேண்ட் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ நிலைய வல்­லு­நர்­கள் மேற்­கொண்­ட­னர்.

பன்றி இத­யம் பொருத்­தப்­பட்ட திரு பென்­னட் நல்ல உடல்­நி­லை­யு­டன் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

"இத­யம் செயல்­ப­டு­கிறது. அதன் இயக்­கம் இயல்­பாக இருப்­ப­து­போல் தோன்­று­கிறது. நாங்­கள் உற்­சா­க­மாக இருக்­கி­றோம். ஆனா­லும், நாளை என்ன நடக்­கும் என்­பது தெரி­யாது," என்­றார் இந்த அறுவை சிகிச்­சையை மேற்­கொண்ட மருத்­து­வர் பார்ட்லி கிரி­ஃபித்.

இந்நிகழ்வு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சைக்­கா­கக் காத்­தி­ருக்­கும் நூற்­றுக்­கணக்­கா­னோ­ரி­டம் பெரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தியுள்ளது.

கடந்த ஆண்டு 41,354 அமெ­ரிக்­கர்­க­ளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் பாதிக்கு மேற்­பட்­டோர் சிறு­நீ­ர­கங்­களை நன்­கொ­டை­யா­கப் பெற்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. சென்ற ஆண்­டில் 3,817 அமெ­ரிக்­கர்­க­ளுக்கு மாற்று இத­யம் பொருத்­தப்­பட்­டது.

இருப்­பி­னும், மாற்று உறுப்பு கிடைப்­பதில் கடும் பற்­றாக்­குறை நில­வு­கிறது. உறுப்­பிற்­கா­கக் காத்­தி­ருப்­போர் பட்­டி­யலில் இருப்போரில் நாள்­தோ­றும் கிட்­டத்­தட்ட 12 பேர் உயி­ரி­ழப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.