வட்ட ரயில் பாதையின் சுரங்கப் பாதை பணிகள் நிறைவுபெற்றன

வட்ட ரயில் பாதையின் சுரங்கப் பாதை பணிகள் நிறைவுபெற்றன

1 mins read
0ebf5288-f2d0-4fb5-aebf-e2c3f4079b6c
கண்டோன்மண்ட் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் புதன்கிழமை (ஜனவரி 12) அன்று நிறைவுபெற்றன. -

வட்ட ரயில்பாதையின் சுரங்கப் பாதை பணிகள் நிறைவுபெற்றன.

கண்டோன்மண்ட் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் புதன்கிழமை (ஜனவரி 12) அன்று நிறைவுபெற்றன.

இதன்வழி தற்போது ஹார்பர்ஃப்ரண்ட் ரயில் நிலையத்தில் முடியும் வட்டப் பாதை, மரீனா பே வரை நீட்டிக்கப்பட்டு, பெயருக்கேற்ப முழுமை பெறும்.

நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள நீட்டிக்கப்பட்ட பாதையில் மூன்று நிலத்தடி ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

வரும் 2026ஆம் ஆண்டு அந்த ரயில் நிலையங்கள் செயல்படத் தொடங்கும்.

அந்த புதிய நிலையங்கள் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.

தெலோக் பிளாங்காவிலிருந்து செல்லும் பயணிகள் இரண்டு முறை ரயில்கள் மாறாமல் நேரடியாக மரீனா பே செல்ல அதுவும்.

அது பயண நேரத்தில் 10 நிமிடம் சேமிக்க முடியும்.

இவ்வேளையில் பாய லேபாரில் உள்ள கிம் சுவான் ரயில் கிடங்கை விரிவாக்கும் பணிகளும் நன்கு நடைபெற்று வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

முழுமைபெற்ற ரயில் பாதையில் செல்வற்காக 23 ரயில்கள் வாங்கப்பட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்படும்.

அதன் மூலம், கிம் சுவான் கிடங்கில் 133 ரயில்கள் நிறுத்தி வைக்கப்படும்.

தற்போது அங்கு 70 ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.