கூடுதல் தடுப்பூசியை திரும்பத் திரும்ப போடுவது சரியானதல்ல: உலக நிறுவனம்

கூடுதல் தடுப்பூசியை திரும்பத் திரும்ப போடுவது சரியானதல்ல: உலக நிறுவனம்

1 mins read

புதிய வகைத் தொற்­று­கள் உரு­வா­கும் நிலை­யில் ஒரே தடுப்­பூ­சிக்­கு­ரிய கூடு­தல் தடுப்­பூ­சி­களை மீண்­டும் மீண்­டும் போடு­வது என்­பது பயன்­த­ரக்­கூ­டிய உத்­தி­யாக இருக்­காது என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்து உள்­ளது.

அதற்­குப் பதி­லாக, தொற்­றுக்கு எதி­ரான சிறந்த பாது­காப்­பைத் தரக்­கூ­டிய புதிய தடுப்­பூ­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யு­மா­றும் அதன் நிபு­ணர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர். உலக சுகா­தார நிறு­வ­னத்­தால் ஏற்­

ப­டுத்­தப்­பட்ட நிபு­ணர் குழு ஒன்று கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளின் செயல்­பா­டு­களை ஆராய்ந்த பின்­னர் தனது கருத்­து­களை வெளி­யிட்­டது.

ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் கொவிட்-19 தடுப்­பூ­சி­யின் புதிய மருந்தை அளிப்­பது கொள்ளை ­நோயை எதிர்த்­துப் போரா­டு­வ­தற்­கான சரி­யான நட­வ­டிக்­கை­யாக இருக்­காது என்று அந்­தக் குழு தெரி­வித்­துள்­ளது. நடப்­பில் இருக்­கும் தடுப்­பூ­சி­கள் புதிய வகை ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­படும் மக்­க­ளி­டம் குறை­வான எதிர்ப்­பாற்­ற­லைத் தரு­வ­தாக கொவிட்-19க்கான அக்குழு தனது முதற்­கட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.