பள்ளிக்கு வெளியே தீப்பிடித்துக்கொண்ட வாகனம்: யாருக்கும் காயம் ஏற்படவில்லை

மாரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்­ளிக்கு வெளியே கறுப்பு மெர்­சி­டிஸ் வாக­னம் தீப்­பி­டித்­துக்­கொண்­டது. நேற்று காலை சுமார் ஏழரை மணிக்கு இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை. வாக­னத்­தில் இருந்த ஒரு மாது, அவ­ரது மகன் இரு­வ­ரும் தீ மூள்­வதற்கு முன்பே வெளி­யே­றி­விட்­ட­னர்.

“பள்­ளிக்­குள் செல்ல நாங்­கள் வாக­னத்­தில் வரி­சை­யில் காத்­துக்­கொண்­டி­ருந்­தோம், அப்­போது ஏதோ எரி­வதை நுகர்ந்­தோம், விரைவில் வாக­னத்­தி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எனது மகன் சொன்­னான்,” என திரு­வாட்டி குவெக் என்று தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்ட வாக­னத்தை ஓட்­டிய மாது தெரி­வித்­தார். சம்­ப­வம் நிகழ்ந்­த­போது தொடக்கநிலை ஒன்­றில் பயி­லும் தனது மகனை அவர் பள்­ளிக்கு அழைத்­துச் சென்­று­கொண்­டி­ருந்­தார்.

திரு­வாட்டி குவெக் பள்­ளி­யில் உதவி கேட்­ட­தா­கத் தெரி­ய­வந்­தது. 995 என்ற அவசர உதவி எண்­ணுக்­கும் அழைத்­தி­ருக்­கி­றார். அதற்­குப் பிறகு வாக­னம் தீப்­பி­டித்­துக்­கொண்­டது.

பள்­ளி­யின் பாது­கா­வல் அதி­காரி ஒரு­வர் தீய­ணைப்பு சாத­னத்­தால் தீயை அணைக்க முயன்­றிருக்கிறார். சில நிமி­டங்­க­ளுக்கு ஒரு­முறை தீப்­பிடித்துக்­கொண்ட வாக­னத்­தி­லி­ருந்து வெடிக்­கும் சத்­தம் கேட்­டது.

வாக­னத்­தி­லி­ருந்து கறுப்­புப் புகை வெளி­யா­னது. புகை பள்ளிக்­குள்­ளே­யும் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் சிறிது நேரத்­தில் தீயை அணைத்­த­னர். நேற்று காலை ஏழரை மணி­ய­ள­வில் இச்­சம்­ப­வம் குறித்து தங்­க­ளுக்­குத் தக­வல் வந்­த­தா­கக் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

சம்­ப­வத்தை நேரில் கண்­ட­தால் பாதிக்­கப்­பட்ட சில மாண­வர்­க­ளுக்கு மாரிஸ் ஸ்டெல்லா பள்ளி ஆத­ரவு வழங்­கும்.

தீச்­சம்­ப­வம் குறித்த விசா­ரணை தொடங்­கி­யுள்­ளது

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!