அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்களாக வழிபடலாம்

அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்களாக வழிபடலாம்

3 mins read

எதிர்­வ­ரும் செவ்­வாய்க்­கி­ழ­மை­தைப்­பூ­சத் திரு­நா­ளன்று கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே கோயி­லுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் மருத்­துவ அடிப்­ப­டை­யில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தகுதி பெறா­த­வர்­களும் 12 வய­துக்­கும் குறை­வான தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத

சிறா­ரும் இதற்கு விதி­வி­லக்கு.

கோயி­லில் அதி­க­பட்­சம் ஐந்து பேர் கொண்ட குழுக்­களாக

மட்­டுமே இறை வழி­பாட்­டில் ஈடு­ப­ட­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தைப்­பூ­சத் திரு­நா­ளன்று டேங்க் ரோட்­டில் உள்ள ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி கோயி­லுக்கு மொத்­தம் 14,000 பக்­தர்­கள் திரள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அவர்­களில் 7,000 பேர் பால்­கு­டம் எடுப்­பர் என்று கோயில் கூறியது. பால்­கு­டம் எடுப்­ப­வர்­

க­ளுக்­கென்றே தனி வரிசை இருக்­கும்.

அதன் வழி­யாக அவர்­கள் இரண்­டி­ரண்டு பேரா­கக் கோயி­லுக்­குள் நுழை­ய­லாம்.

திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வி­

லி­ருந்து செவ்­வாய்க்­கி­ழமை 10 மணி வரை கோயி­லுக்­குள்

பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

இவ்­வாண்டு ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் ஆல­யத்­தி­லி­ருந்து ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி கோயி­லுக்கு பக்­தர்­கள் காவ­டி­களை ஏந்­திக்­கொண்டு பாத யாத்­தி­ரை­யா­கச் செல்­வ­தைப் பார்க்க முடி­யாது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று.

டேங்க் ரோட்­டுக்­குள் நுழை­ய­வும் அங்­கி­ருந்து வெளி­யே­ற­வும் பக்­தர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் தடுப்­பு­களும் திசைக்­காட்­டி­களும் வைக்­கப்­படும்.

டேங்க் ரோடு அன்று போக்­கு

­வ­ரத்­துக்கு மூடப்­பட்­டி­ருக்­கும். 600 தொண்­டூ­ழி­யர்­கள் பக்­தர்­

க­ளுக்கு வழி­காட்­டும் பணி­யில் ஈடு­ப­டு­வர்.

கோயி­லுக்­குள் செல்ல இரண்டு வெவ்­வேறு நுழை­வா­யில்­கள்

திறந்­து­வி­டப்­பட்­டி­ருக்­கும்.

அவற்­றுக்­குத் தனித்­த­னிப் பாதை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு பாதை­யில் செல்­ப­வர் மற்­றொரு பாதை­யில் செல்­ப­வ­ரு­டன் தொடர்­பில் இருக்­கக்­கூ­டாது. கோயி­லுக்­குள் செல்­லும் அனைத்து பக்­தர்­களும் டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது சாத­னம் மூலம் பதிவு செய்­து­கொள்ள வேண்­டும்.

நேர்த்­திக்­க­டன் செலுத்­து­

ப­வர்­க­ளைத் தவிர்த்து, முன்­ப­திவு செய்­தி­ருந்த மற்­ற­வர்­கள் கோயி­லுக்­குள் செல்­வ­தற்கு முன்பு டேங்க் ரோட்­டுக்­குள் நுழை­யும் இடத்­தில் பதிவு செய்­து­கொள்­ள­லாம்.

பதிவு செய்­து­கொண்ட பிறகு கோயி­லுக்­குச் செல்­லும் தடங்­களில் அதி­க­பட்­சம் ஐவர் கொண்ட குழுக்­க­ளா­கச் செல்­ல­லாம். கோயில் சன்­ன­தி­யில் இறை வழி­பாட்­டுக்­குப் பிறகு கோயி­லி­ல் இருந்து வெளி­யே­றும் இடம் எங்குள்ளது என அவர்களுக்குத் தெரி விக்கப்படும்.

பால்குடம் எடுக்க விரும்­பும் பக்­தர்­கள் ரிவர் வேலி சாலை­யில் உள்ள நுழை­வி­டத்­தில் பதிவு

செய்­து­கொள்ள வேண்­டும்.

பால்குடம் எடுக்­கும் ஒவ்­வொரு பக்­த­ரு­ட­னும் ஒரு­வர் துணைக்­குச் செல்­ல­லாம்.

பதிவு செய்­த­வு­டன் பக்­தர்­கள் கூடு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள நான்கு இடங்­களில் அவர்­கள் கோயி­லுக்­குள் செல்­லக் காத்­தி­ருப்­பர்.

கோயி­லுக்­குள் கூட்ட நெரி­சல் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பக்­தர்­கள் சன்­ன­தியை வலம் வரு­வ­தற்கு முன்பு முன்­கூட்­டியே தயார் செய்து வைக்­கப்­படும் பால்­கு­டம் அவர்­க­ளி­டம் தரப்­படும். நேர்த்­திக்­க­டனை நிறை­வேற்­றிய பிறகு பக்­தர்­கள் கிளெ­மென்­சியூ அவென்யூ வழி­யாக வெளி­யே­று­வர். ஒரே நேரத்­தில் அதி­க­பட்­சம் 700 பேர் கோயிலுக்­குள் இருக்­க­லாம். கோயி­லுக்­குச் செல்­ப­வர்­கள் அனைத்து நேரங்­க­ளி­லும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்.

அவர்­கள் பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றைக்கு உட்­பட்டு நடந்­து­கொள்ள வேண்­டும்.

தைப்­பூச நாளன்று கோயி­லுக்கு வெளியே பக்­தர்­கள் கூடக்­கூ­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேல்­ வி­வ­ரங்­களுக்கு ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் இணை­யப்­பக்­கத்­தைப் பக்­தர்­கள் நாட­லாம்.